'வெற்றி கழகம்'? அல்லது 'வெற்றிக் கழகம்' - எது சரி ? விஜய்யின் கட்சி பெயர் குறித்து ஜேம்ஸ் வசந்தனின் அருமையான விளக்கம்.
சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.
இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார்.
https://twitter.com/Esalacupnamdea/status/1753420073581301850
இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அதே சமயம் விஜய் கட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகம் என்ற பெயருக்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் என்று தான் வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ' 'தமிழக வெற்றி கழகம்' இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு. 'வெற்றி கழகம்' என்பது சரியா? அல்லது 'வெற்றிக் கழகம்' என்பது சரியா? எனக்கு இலக்கண அறிவு கிடையாது. ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம்.நான் அறிந்தவரை, அது 'வெற்றிக் கழகம்' என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
https://www.youtube.com/shorts/VAKomtZvOko
வலிமிகும் இடங்களைக் கொஞ்சம் அலசி ஆய்ந்தபோது இது கண்ணில் பட்டது.உடன் தொக்க தொகையில் ஒற்று ஆறாம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்க தொகை அமையாது. மற்ற 2, 3, 4, 5, 7 வேற்றுமைகளில் உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளில் வலி மிகும்.(அ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
எ-டு. கஞ்சி + தொட்டி = கஞ்சித் தொட்டி (கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி.) வெற்றி + திருமகன் = வெற்றித் திருமகன் (வெற்றியைப் பெற்ற திருமகன்.) 'வெற்றிக் கழகம்' என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்? தேர்ந்தவர் உறுதிசெய்யலாம்' என்று பதிவிட்டுள்ளார்.