'வேற வழி இல்லாம தான் அனிருத் பாட்டு ஹிட் ஆகுது'- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சொன்ன கருத்தால் பரபரப்பு
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அனிருத் பற்றி கூறியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் ராக் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அனிருத். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களைக் கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடியிருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த '3' படத்தின் மூலம் தான் அனிருத் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதுவும் 'ஒய் திஸ் கொலவெறி' என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலமானார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். இதனால் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுடிலும் இவரின் இசைக்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.
அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்:
அந்த வகையில் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த 'தேவாரா 1' படத்தின் பாடல்களுக்கு இவர் இசையமைத்திருந்தார். அந்தப் பாடல்களும் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி இருந்தது. அதோட அந்தப் பாடல்களைக் கேட்ட ஜூனியர் என்டிஆர், அனிருத் தான் இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரஹ்மான் என புகழ்ந்திருப்பார். இது ஒரு புறம் இருக்க, அனிருத்னின் இசையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் இசையை காபி செய்கிறார் என்று கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் மீம்கள் வைரலானது.
https://www.youtube.com/shorts/2SeUTi6ZGvU
ஜேம்ஸ் வசந்தன் கருத்து:
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அனிருத் குறித்து பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுல அவர், அனிருத் ஓட இசை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சேலஞ்சிங்காக இல்லை என்பது நான் முடிவு பண்றது இல்லை. ரசிகர்களாகிய 8 கோடி மக்கள் தீர்மானிப்பது தான், இங்க மார்க்கெட். வேற வழி இல்லாம, இப்போ அனிருத் ஓட பாட்டு எல்லாமே ஹிட் ஆகுது. அதனால்தான் சோனி மியூசிக் அவங்க கிட்ட போறாங்க. அதே மாதிரி, பெரிய ப்ரொடியூசர்ஸ், சங்கர் சார் மாதிரி பிரம்மாண்ட பட இயக்குனரும் அவர்கிட்ட போறாங்க. அது ஒரு பக்கம். ஆனாலும், உலக அளவில் நம்பர் 1 மியூசிக் டைரக்டர் யார் என்றால் ரஹ்மான் தானே.
அடுத்த தலைமுறை உதிக்கவில்லை:
அனிருத் பாடல்கள் ஹிந்தில அந்த அளவுக்கு ரீச் ஆகல. தெலுங்குலயும் இன்னும் அந்த அளவுக்கு படம் பண்ணல. சர்வதேச அளவுக்கு ரீச் ஆகி இருக்கிறது இப்ப வரைக்கும் ரஹ்மான் சார் தானே, அந்த இடத்தை யாரும் தொட முடியவில்லை தானே. ஹாலிவுட் வரைக்கும் அசத்திட்டு வந்த மனுஷன் தானே அவரு. சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அவர் படம் பண்ணி இருக்காரு. அந்த ரிச்சுக்கு இணையாக சவால் விடும் அளவுக்கு அடுத்த தலைமுறை இன்னும் வரவில்லை, உதிக்கவில்லை என்று பேசி இருக்கிறார். எப்படி ஜேம்ஸ் வசந்தன் அனிருத் பற்றி கூறியுள்ள கருத்து சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜேம்ஸ் வசந்தன்:
90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர். மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பதுக்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி பல சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகிறார்.