கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.பாடகர் எஸ்.பி.பி யின் மறைவிற்கு முன் இசையமைப்பாளர் இளையராஜா ‘எழுந்து வா பாலு’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று எஸ் பி பியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இளையராஜா, எஸ் பி பி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எஸ் பி பி உடல்நிலை ரொம்ப மோசமானவுடன், நானும் ஒரு வீடியோ பேசி வெளியிட்டேன். “பாலு.. உனக்காகக் காத்திருக்கிறேன் சீக்கிரம் வா” என்று அதில் சொல்லியிருப்பேன். அந்த வீடியோவை எஸ்.பி.பிக்கு நினைவு வந்தபோது எஸ்.பி.சரண் போட்டுக் காட்டியிருக்கிறான்.

Advertisement

உடனே கண் எல்லாம் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். யாரையாவது பார்க்க வேண்டுமா என்று எஸ்.பி.பியிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது “ராஜாவை வரச் சொல்லு” என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா. அவருடைய மனதில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்றால், என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும்.

அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம்” என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து மறைமுகமாக கேலி செய்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒருவன் உயிருடன் இருக்கும்போது அவனை நோகடித்து, புண்படுத்திவிட்டு இப்போது அவன் இல்லையென்று ஆனவுடன், அவனைப்போல் ஒருவன் இல்லை என்று பேசுவது என்ன ஒரு மாய்மாலம்,நேற்று SPB நினைவு தினம்! என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

இளையராஜா தன்னுடைய பாடல் ராயல்டி விவாகரத்தில் எஸ் பி பி தன் பாடல்களை தன் அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதனை குறிப்பிட்டே ஜேம்ஸ் வசந்தன் இப்படி மறைமுகமாக ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement