இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இன்று இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் அனைவரும் நினைவஞ்சலி செலுத்தி உள்ளார்கள். இந்நிலையில் எஸ்பிபிக்கு கூடிய விரைவில் மணிமண்டபம் கட்டுவதாக அவருடைய மகன் எஸ்பிபி சரண் பேட்டியில் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்பிபி அவர்கள் 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும், இவருடைய உடல் சென்னையிலுள்ள தாமரைபாக்கம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. எஸ் பி பி இறந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னமும் பல பாடல்களால் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார். இப்படி ஒரு இருக்க எஸ் பி தனக்கு அனுப்பிய செய்தி குறித்து ஜேம்ஸ் வசந்தன் நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement

கடந்த 2014 ஆம் ஆண்டு எஸ் பி பலருக்கும் ஒரு மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் ‘எட்டு வயது பெண் குழந்தை ஒருவர் தன்னை யாரென்று தெரியாத நபர் வந்து தன்னுடைய பெற்றோர்கள் அனைத்து வரச் சொன்னதாக கூறிய போது அந்த சிறுமி அந்த நபரிடம் பாஸ்வேர்ட் கேட்டிருக்கிறார் இதனால் அந்த நபர் குழம்பி போக அவரது குழப்பத்தை பயன்படுத்தி அந்த எட்டு வயது சிறுமி அங்கிருந்து ஓடி சென்று இருக்கிறார்.

அந்த சிறுமியும் அவரது அம்மாவும் ஒரு பாஸ்வேர்ட் ஒன்றை வைத்து இருக்கிறார்கள். ஒரு வேலை தன்னை யாராவது அழைக்க வந்தால் இந்த பாஸ்வேர்ட் உதவும். பாஸ்வேர்ட் தெரியாத நபர்களிடம் பிள்ளைகள் செல்லாது. இது சுலபமான வழி எனவே உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் இது போன்ற பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது’ இந்த பதிவை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்

Advertisement

எஸ் பி பியின் இறப்பிற்கு பின் அவரது நினைவு நாளில் பேசிய சரண் ‘அப்பாவுக்கு என்ன செய்கிறோம் என்பதைவிட அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருப்பது தான் முக்கியமான ஒன்று. தற்போது நாங்கள் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், அதற்கான பணம், நேரம் எல்லாம் அதிகம் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம்.

Advertisement

மணி மண்டபத்திற்கான திட்டமிடல்கள் முடிந்தவுடன் அதற்கான வேலைகள் தொடங்கப்படும். ஒரு வருடத்திற்குள் மணிமண்டபம் கட்டி முடிப்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஏனென்றால் மியூசியம், திரையரங்கம் உள்ளிட்ட பல கட்டடங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதோடு எல்லா வேலைகளும் எப்போது முடியும் என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக கூடிய விரைவில் எல்லா வேலைகளையும் தொடங்குவோம் என்றும் கூறி இருந்தார். ஆனால், இதுநாள் வரை எஸ் பி பிக்கு மணி மண்டபம் கட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement