பா.ம.க கெளரவ தலைவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மகன் - காரணம் இது தானாம்

By subhashini · 25/2/2025

அரசியல்வாதி மகனின் திருமணத்தில் விஜய்யின் மகன் கலந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருக்கிறது. கடைசியாக விஜய் நடித்த கோட் படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.

இதை அடுத்து தற்போது விஜய் அவர்கள் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். அதன் பின் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு இருந்தார். அதோடு இவர் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

ஜேசன் சஞ்சய் குறித்த தகவல்:

இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற சில குறும்படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பின் இவர் இறுதியாக ‘Pull The Trigger’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படம் சஞ்சய் இயக்கிய மற்ற குறும்படத்தை விட நன்றாகவே இருந்ததது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம்:

இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் படத்திலேயே பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சஞ்சய் கைகோர்த்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=q9eV3U_U_tI

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்கு குழுவினர் இலங்கைக்கு செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் மகன் சஞ்சய் அரசியல்வாதி மகன் திருமணத்திற்கு சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்தில் கலந்து கொண்ட காரணம்:

அதாவது, பாமக கௌரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே மணியின் உடைய பேரன் திருமண விழாவில் தான் ஜோசன் சஞ்சய் கலந்து இருக்கிறார். இன்று நடந்த திருமணத்திற்காக ஜோசன் சஞ்சய் சேலம் விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். இவரை அடுத்து விஜய் சேதுபதியும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். ஜிகே மணியின் மகனான ஜி.கே.எம் தமிழ் குமரன் தான் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இதனால் தான் ஜோசன் சஞ்சய் இந்த திருமணத்தில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full