ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இசையமைப்பாளர் யார் தெரியுமா? - படப்பிடிப்பு குறித்து வெளியாகி உள்ள புதிய அப்டேட் இதோ

By Rajkumar · 20/7/2024

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. கடைசியாக விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'கோட்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

View this post on Instagram

A post shared by Jason Sanjay (@_jason__sanjay_)

தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். 'வேட்டைக்காரன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடி இருப்பார் சஞ்சய். அதை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பு படித்து இருக்கிறார். ஜெசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை ஜங்ஷன், சிரி, 'Pull The Trigger' என்ற சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.

சஞ்சையின் முதல் படம்:

இப்படி ஒரு நிலையில் விஜயின் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்கனவே லைகா நிறுவனம் வெளியிட்டு இருந்தது. லைக்கா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து இருக்கிறது. அதேபோல் லைகா நிறுவனத்தின் முதல் படமே விஜயின் 'கத்தி' திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம்:

இந்நிலையில் முதல் படமே இப்படி பிரம்மாண்ட பேனரில் விஜய் மகனுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ணி கோலிவுட் வட்டாரமே மிக வியப்பில் ஆழ்ந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனது முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சஞ்சய் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர்களுக்கு என்னுடைய கதை பிடித்திருந்தது, எனக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார்கள். வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை நடிக்க திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டு இருந்தார் சஞ்சய்.

கதாநாயகன் குறித்து :

மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க கவின் உள்பட ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஹீரோ இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிந்து விட்டதாகவும், அடுத்த கட்டப் பணிகளை தொடங்க ஜேசன் சஞ்சய் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் குறித்து :

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் சுஷின் ஷியாம் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்த இருவரில் ஒருவர் தான் இசையமைப்பாளராக பணிபுரிவார் என்றும், அனேகமாக யுவன் சங்கர் ராஜா தான் கமிட்டாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் சுஷன் ஷியாம், ஏற்கனவே நிறைய மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்ற நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full