ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிப்பாரா? ‘சிக்மா’ பட நடிகர் சம்பத் ராஜ் சொன்ன தகவல்!

ஜேசன் சஞ்சய்க்கு ஹீரோ ஆகனும்ன்னு எல்லாம் ஆசை இல்லை...ஆனால் அது ஒருநாள் நடக்கலாம் - நடிகர் சம்பத் ராஜ்

By ·

இயக்குனர் ஜேசன் சஞ்சயின் முதல் படமான ‘சிக்மா’ குறித்து நடிகர் சம்பத் ராஜ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சஞ்சயுடன் பணியாற்றிய அனுபவம், அவரது இயக்கும் திறன், தனிப்பட்ட அணுகுமுறை மற்றும் எதிர்காலத்தில் அவர் ஹீரோவாக நடிப்பாரா என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

முதல் படத்திலேயே தெளிவான இயக்குனர்

சம்பத் ராஜ் கூறுகையில், ஜேசன் சஞ்சய் ஒரு கான்ஃபிடன்ட் இயக்குனராக இருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, சஞ்சயிடம் இருக்கும் ‘POUND’ ஸ்கிரிப்ட் மற்றும் அதை திரையில் கொண்டு வர வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் தெளிவு தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். ஒரு காட்சியில் தான் எதிர்பார்க்கும் விஷயம் சரியாக வரவில்லை என்றால், அதை நடிகரிடம் தயக்கமின்றி எடுத்துச் சொல்லும் பழக்கம் சஞ்சயிடம் இருப்பதாகவும் சம்பத் ராஜ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தான் எதிர்பார்க்கும் நடிப்பை அவரே நடித்துக் காட்டி நடிகர்களுக்கு விளக்குவார் என்றும் கூறியுள்ளார். இது ஒரு இயக்குனராக சஞ்சயின் முக்கியமான பலம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சஞ்சய் ஹீரோவாகலாம்!”

சஞ்சயை பார்த்தால் எதிர்காலத்தில் அவர் ஹீரோவாக மாறக்கூடும் என்ற தனது தனிப்பட்ட எண்ணத்தையும் சம்பத் ராஜ் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் கூறிய கதையில் சஞ்சயே ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும் என்றும் அவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், சஞ்சய்க்கு தற்போது நடிகராக வேண்டும் என்ற ஆசையை விட இயக்குனராக வேண்டும் என்பதுதான் முக்கியம். தான் இயக்கம் தொடர்பாக படித்துள்ளதாகவும், நீண்ட காலமாகவே இயக்குனராக வேண்டும் என்ற விருப்பத்தை சஞ்சய் தன்னிடம் தெரிவித்ததாகவும் சம்பத் ராஜ் கூறியுள்ளார்.

“சிக்மாவின் முக்கிய Selling Point ஜேசன் சஞ்சய்”

‘சிக்மா’ படத்தில் பல முக்கியமான நடிகர்கள் இருந்தாலும், அந்த படத்தின் மிகப்பெரிய Selling Point-களில் ஒன்றாக “A Film by Jason Sanjay” இருப்பதாக சம்பத் ராஜ் தெரிவித்துள்ளார். 26 வயது இளைஞரான சஞ்சய், Pleasant-ஆன மற்றும் எளிமையான Personality கொண்டவர் என்றும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அவர் மிகவும் இயல்பாக கையாள்வதாகவும் கூறியுள்ளார். படம் வெற்றி பெற்றாலும் கூட சஞ்சயின் இந்த இயல்பான குணம் மாறாது என்ற தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“விஜய்யின் மகன் என்பதால் கிடைத்த வாய்ப்பு... அதை மறுக்க முடியாது”

ஜேசன் சஞ்சய்க்கு அவரது குடும்ப பின்னணி ஒரு Advantage என்பதை சம்பத் ராஜ் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில், அந்த வாய்ப்பை மட்டுமே நம்பி அவர் இந்தப் படத்தை உருவாக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் முறையாக படித்து, Short Films செய்து, தனது திறமையை வெளிப்படுத்திய பின்னரே திரைப்பட இயக்கத்தில் களமிறங்கியதாக அவர் கூறியுள்ளார்.

பின்னணி இல்லாத திறமையான பல இளைஞர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதையும் சம்பத் ராஜ் குறிப்பிட்டுள்ளார். ‘சிக்மா’ வெளியாகும் நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக எந்த மாதிரியான அடையாளத்தை உருவாக்கப் போகிறார் என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை