நான் அப்படி இருப்பதற்கு அவள் என் மகள் இல்லை, ஐஸ்வர்யா ராய் குறித்து ஜெயா பச்சன் சொன்னது

By Rajkumar · 15/8/2024

தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் குறித்து, ஜெயா பச்சன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. எத்தனை உலக அழகிகள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து என்றும் நீங்காத உலகஅழகியாக இருப்பவர் நம்ம ஐஸ்வர்யா ராய். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஒரு காலத்தில் இவர் பாலிவுடில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேலும், 22 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக நிலைத்து இருக்கிறார். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் திருமணம்:

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்று அழகான பெண் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் படங்களில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபகாலமாகவே ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் உலாவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=ntf7ZAX-6WM

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து:

வதந்திகளுக்கு ஏற்ற மாதிரி, சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி வீட்டுக்கு திருமணத்திற்கு, ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் சேர்ந்து தனியாக வந்திருந்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சன் தன்னுடைய அப்பா, அம்மா, சகோதரி உடன் தனியாக வந்திருந்தார். இருவரும் தனித்தனியாக தான் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இதனால் இவர்களின் விவாகரத்து சர்ச்சை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து இருக்கிறது. கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ரேகாவின் நட்பு:

மேலும், அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய், நடிகை ரேகாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் தன்னுடைய மாமியார் ஜெயாவை கூட கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல் ரேகா அவர்கள் அமிதாப் பச்சன் உடைய முன்னாள் காதலி. இதனாலையே ரேகாவுக்கும் ஜெயாவுக்கும் இடையே சண்டை இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றம் ரேகா நெருக்கமாக இருப்பது கூட குடும்ப பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஜெயா பச்சன் வீடியோ:

இந்நிலையில் ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராய் குறித்து பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பழைய பேட்டி ஒன்றில், ஜெயா பச்சனிடம் திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் கண்டிப்பாக இருந்தீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜெயா பச்சன், கண்டிப்பாக இருப்பதற்கு அவள் என் மகள் அல்ல, மருமகள். அவரிடம் நான் ஏன் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவருடைய அம்மா அவரிடம் கண்டிப்பாக இருந்திருப்பார் என்று நம்புகிறேன். மகளுக்கும் மருமகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஜெயாவின் இந்த பதிலிலிருந்தே மாமியார்-மருமகள் உறவு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full