இப்படி நடக்கும்னு தெரிஞ்சிதா கலைஞர்100 விழாக்கு விஜய் அஜித் வரல - ஜெயக்குமார் சொன்ன விஷயம்.

By Rajkumar · 9/1/2024

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் அஜித்- விஜய் வராத குறித்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் தினம் பிரம்மாண்டமாகநடந்து முடிந்தது. ந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.

தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.இவருடன் இந்த விழாவில் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா, நயன்தாரா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று இருக்கின்றார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்களாக இருக்கக்கூடிய அஜித்- விஜய் இருவருமே கலந்துகொள்ளவில்லை. இவர்கள் ஏன் வரவில்லை? என்ன பிரச்சனை? இதற்கு பின்னணி ஏதாவது இருக்கிறதா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய், அஜித் இந்த விழாவிற்கு வாராத காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

https://twitter.com/djayakumaroffcl/status/1744065954471186617

அதில் 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரு.கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் திரு.ரஜினிகாந்த் மற்றும் திரு.கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது! அவரது உதவியால் தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?

https://twitter.com/syedfromdubai/status/1743921036301648106/video/1

இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான திரு.விஜய் மற்றும் திரு.அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர் ' என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இது குறித்து பிரபல யூடியூப் விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பேசிய போது விழா அழைப்பிதழில் ரஜினி, கமலுக்கு கொடுத்த மரியாதையை விஜய் ,அஜித்திற்கு கொடுக்கவில்லை அதனால் தான் இருவரும் வரவில்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full