உதயநிதியை நடிக்க கூடாது என்று கண்டித்து பேசிய ஜெயக்குமாருக்கு விஷால் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாமன்னன்.

தற்போது உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் தமிழ்நாட்டின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவைப் பொறுப்பு கடந்த மே மாதமே நடந்தது.

Advertisement

பின் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு க ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கப்படுகிறது. உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை என்ற பிரிவுகளில் அமைச்சரவையில் பதவி கிடைத்து இருக்கிறது. இந்த நிகழ்வு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், பதவியில் பொறுப்பேற்றவுடன் உதயநிதி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து, இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மாமன்னன் திரைப்படமே என்னுடைய கடைசி திரைப்படம். வாழ்த்துக்கள் சொல்லிய அனைவருக்குமே நன்றி என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருந்தது, அவர்களுடைய குடும்பமே ஒரு கழகம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றால் இனிமேல் திமுகவின் ஹெச் ஆர் உதயநிதியாக தான் இருப்பார்.

Advertisement

அவர் எப்போது பார்த்தாலும் ஆளுநர் தேவை இல்லை என்று சொன்னார். ஆனால், இப்போது தன்னுடைய பிள்ளைகளுக்கு பட்டம் சூட்ட மட்டும் ஆளுநர் தேவையா? திமுகவுக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கட்சிக்காக தியாகம் செய்து பல பேர் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், வாழையடி வாழையாக அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவி வகித்து வருகின்றனர். தமிழ்நாடு ஒன்னும் அமெரிக்கா, லண்டன் போல் மாறப் போவதில்லை. அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று கடுமையாக உதயநிதி குறித்து கண்டித்து பேசி இருந்தார்.

Advertisement

இதற்கு நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான விஷால் அவர்கள் பதில் ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கும் கனவாக இருந்தது. தற்போது அவர் அமைச்சர் ஆனதை பார்க்கும்போது நண்பனாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலமைச்சரின் மகன் என்று அவர் எந்த இடத்திலையுமே பயன்படுத்தியது இல்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் மேடையில் பேசும் போதெல்லாம் ஏதாவது ஒரு சினிமா பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் பாடலாம் ஆனால் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனை அடுத்து விஷாலின் பேட்டிக்கு ஜெயக்குமார் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், டேய் அனகோண்டா என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement