காதல் திருமணம் செய்த சூர்யா, திருமணத்திற்கு முன் கார்த்திக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அட்வைஸ். இந்த வீடியோவை பாருங்க.
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் சிவகுமார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். 1965 ஆம் ஆண்டு வெளிவந்த காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவருடைய மகன்கள் தான் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா குறித்து சிவகுமார் :
சூர்யா, கார்த்திக் இருவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகுமார் அவர்கள் நடிகர் சங்கம் மீட்டிங்கில் கார்த்திக்கு ஜெயலலிதா அம்மாகூறிய அறிவுரை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் அம்மா ஜெயலலிதா. அவரை தமிழகமே அம்மாவாக தான் பார்த்தது.
மகள் திருமணத்திற்கு வராத ஜெயலலிதா :
என் மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க நான், சூர்யா, என் மனைவி எல்லோரும் அம்மாவை பார்க்க சென்றிருந்தோம். அப்போது அவர் திருமணம் எப்போது என்று கேட்டார். உடனே நான் ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் நடைபெறும் என்று சொன்னேன். அப்போது அம்மா உன்னுடைய திருமணத்திற்கு தான் வர முடியவில்லை. உன் மகளுடைய திருமணத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னார். நான் ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா, நீங்கள் திருமணம் முடிந்த பிறகு கூட வாருங்கள்.
சூர்யா காதல் திருமணம் :
5 மணிக்கு வருவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று சொன்னேன். உடனே அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை நான் வருகிறேன் என்று சொல்லி இரண்டு மூணு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி 4. 50 மணிக்கு திருமணத்திற்கு வந்தார். ஒரு நாட்டின் முதலமைச்சராக இருந்து அவர் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை மதித்து வந்தார். அந்த சமயத்தில் தான் சூர்யா ஜோதிகாவை காதலித்து இருந்தார்.
ஜெயலலிதா கார்த்திக்கு சொன்ன அட்வைஸ் :
பின் அவர்களுடைய திருமணத்திற்கு நாங்கள் ஓத்துக்கொண்டு பத்திரிக்கை வைக்க நான், கார்த்தி, என்னுடைய மனைவி அம்மாவை பார்க்க சென்று இருந்தோம். அப்போது ஜெயலலிதா அவர்கள் வீட்டில் ஒரு காதல் கல்யாணம். சரி இருந்தாலும் கார்த்தி நீ அம்மாவுக்கு பிடித்த பெண்ணாய் பார்த்து உங்க ஜாதியில கல்யாணம் செய்துகொள் என்று அறிவுரை சொல்லி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=SN-6JDjKA8A
உண்மையாலுமே யாராலும் இந்த மாதிரி சொல்ல முடியாது. அதனால் தான் அவர் என்றும் தமிழக மக்களின் அம்மாவாக இருக்கிறார். அதேபோல் என்னுடைய மகன் கார்த்திக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம் என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது கார்த்தி, சூர்யா இருவரும் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்கள்.