ஜெயலலிதா பிறந்தநாள் அன்று விஜய் வெளியிட்ட ஜெயலலிதா வாழ்கை வரலாறு பர்ஸ்ட் லுக்.!
பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல மற்றும் பெற்றது. இந்த நிலையில் மறைந்த முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது.
https://twitter.com/filmistreet/status/1099596393600020482
இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் தயாரிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படத்தை விப்ரி மீடியா தயாரிக்க உள்ளது என்றும் விப்ரி ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் திரை வாழ்க்கையில் ஆரம்பித்து, அரசியலில் அவர் நுழைவது வரைக்குமான காட்சிகள் தான் இடம்பெறும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்திற்கு 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் ஏற்கனவே விஜய் வைத்து எடுத்த படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்தனர். அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.