அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதாவிடம் அஜித் சொன்ன வார்த்தை - என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 21/2/2025

அஜித்தை அதிமுகவில் இணைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைத்த காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து அஜித் அரசியலுக்கு வருவாரா? என்றெல்லாம் கேள்விகள் வந்தது. ஆனால், அவர் முழுக்க முழுக்க அரசியல் இருந்து விலகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அஜித் சினிமாவை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சூடுதல் ஆகியவற்றில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேசில் அஜித் மற்றும் அவருடைய குழுவினர் பங்குபெற்று மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார்கள்.

அஜித் குறித்த தகவல்:

அதற்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அரசியலுக்கு அஜித்தை ஜெயலலிதா அழைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள், தன்னுடைய ஆலோசகர் ஒருவரிடம் அஜித்தை தன்னுடைய அதிமுக கட்சியில் சேர்வது குறித்து பேசி இருந்தார்கள்.
ஆனால், அஜித் அந்த வாய்ப்பை மறுத்து இருக்கிறார்.

ஜெயலலிதா செய்த வேலை:

மேலும், அஜித் ஒரு ஜென்டில்மேன் என்பதால் தான் ஜெயலலிதா அதிமுக கட்சியில் இணைய சொல்லி கேட்டிருக்கிறார். ஒருவேளை அஜித் மட்டும் ஜெயலலிதாவுடன் அரசியலில் இணைந்து இருந்தால் கண்டிப்பாக அவர் முதல்வர் ஆகிருப்பார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

விடாமுயற்சி:

மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரித்து இருக்கிறது. படத்தில் அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் செல்லும் போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார்.

அஜித் நடிக்கும் படம்:

அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ரக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full