மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதை எதிர்த்து ஜெ. தீபா மனு. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டிருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என்று ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். சொத்துக்குவித்து வழக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர் இந்த வழக்கு விசாரணை பதினெட்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.
இதை சசிகலா உட்பட குற்றவாளி என 2016ஆம் ஆண்டு பெங்களூர் மற்றும் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆளமிட்டு அதன் மூலம் வரும் நிதியே சுற்றி வழக்கிற்கு செலவிடப்பட்ட தொகையை அரசியல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் பொதுமணலும் வழக்கு தொடர்ந்திருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடுவதை நிறுத்தக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சொத்துக்களின் தற்போதைய மதிப்பீட்டை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுமார் 30 நாட்கள் அவகாசம் கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கப்பட்டுள்ளது. அவரது 6 பினாமி நிறுவனங்களில் 65 அசையும், அசையா சொத்துக்களின் தற்போதைய மதிப்புடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்த பொருட்களை ஏலம் விட வேண்டிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பட்டியலை ஒப்படைத்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள், காலணிகள், கை கடிகாரங்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து என்றும் சட்டவிரோத சொத்து பட்டியலில் சேலைகள், காலணிகள் இல்லாததால் அவற்றை ஏலம் விட உத்தரவிட. முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் வங்கி கணக்கில் உள்ள பணம் பற்றி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
ஜெ. தீபா மனு:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் உள்ள சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்த கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏலத்தில் உள்ள சொத்துகளின் மதிப்பை 35 நாட்களில் கணக்கிட்டு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது