இவரால் நான் Pubg விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டேன்..!ஜெயம் ரவி சொன்னது யாரை தெரியுமா..!

By Rajkumar · 16/12/2018

தற்போது உள்ள இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு என்றாலே அது அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் தான்.அதிலும் சிறியவர் முதல் பெரியார் வரை தற்போது Pubg என்ற புதிய விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளதாக 'அடங்காமறு' படத்தின் ப்ரஷ் மீட் ஒன்றில் காமெடியாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள 'அடங்கமறு ' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடித்த இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி இசையமைப்பாளர் சாம் சி எஸ்-ஆல் நான் pubg விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதாக கூறியுள்ளார்.

சாம் சி எஸ் எப்போதும் என்னை pubg விளையாடத்தான் அழைப்பார் என்றும் அவரால் நான் படப்பிடிப்பின் போது கூட pubg விளையாடிக்கொண்டே தான் இருப்பேன் என்றும் வேடிக்கையாக கூறியுள்ளார்.மேலும், pubg விளையாடுவதை குறைத்துவிட்டு கொஞ்சம் வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று மேடையில் சாம் சி எஸ்- ஐ கலாய்த்துள்ளார் ஜெயம் ரவி.   

Tamil Behind Talkies AMP · Quick view
View full