முறிந்தது 15 ஆண்டுகால பந்தம் - விவாகரத்தை அறிவித்து ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை

By Rajkumar · 9/9/2024

பிரபல நடிகர் ஜெயம் ரவி, தற்போது விவாகரத்தை அறிவித்திருக்கும் செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெருவதாக அறிவித்திருந்தார்கள்.

இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பெரிய இருப்பதாக சமீபத்தில் இணையதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன் ஆரவ், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த 'டிக் டிக் டிக்'என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவி-ஆர்த்தி சர்ச்சை:

மேலும், ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி-ஆர்த்தி திகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபத்தில் இவர்கள் விவாகரத்து பெறுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஜெயம் ரவி அறிவிப்பு:

அதில் அவர், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரை இல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு, திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

விவாகரத்து அறிவிப்பு:

எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைகளுக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல் வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெயம் ரவியின் வேண்டுகோள்:

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நட்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full