முதல் முறையாக Salt & peper லுக்கில் ஜெயம் ரவி - இதே கெட்டப்ல ஒரு படம் நடிச்சா செமையா இருக்குமே.

By Ajju · 9/2/2022

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர் ஆவார். அண்ணன் இயக்குனர் மோகன் ஆவார். 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பூமி. இந்த படம் விவசாய பிரச்சனையை மையமாக கொண்ட கதை. இருந்தும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும், படத்தில் ஜெயம் ரவி உடைய கதாபாத்திரம் எல்லாம் படமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பூலோகம் என்ற படம் வெளியாகி இருந்தது.

ஜெயம் ரவி நடிக்கும் படங்கள்:

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கல்யாண கிருஷ்ணன்- ஜெயம் ரவி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தற்போது தற்காலிகமாக ‘ஜேஆர் 28’ என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஜெயம் ரவி அவர்கள் நிமிர்ந்து நில், ஆதிபகவான் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் புதிய கெட்டப்:

இந்த படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ப்ரியா பவானி சங்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். மற்றொரு கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 'ஜெயம் ரவி 30' படத்திற்காக புதிய கெட்டப்பில் இருப்பதாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த படம் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

வைரலாகும் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஜெயம் ரவி அவர்கள் ஆளே மாறி வெள்ளை தாடியுடன் அடையாளம் தெரியாத நபராக தோற்றம் அளித்துள்ளார். தற்போது ஜெயம் ரவியின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இது என்ன புது படத்தின் கெட்டப்பா? இல்லை உங்களுடைய நேச்சுரல் கெட்டப்பா? என்று கேட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full