50 சவரன் நகையை ஏமாற்றிய சிங்கப்பூர் பைலட், திருமணத்தை நிறுத்திய 'வாணி ராணி' நடிகை- விவரம் இதோ
சீரியல் நடிகை ஜெனிப்ரியா, சிங்கப்பூர் பைலட் இடம் ஏமாந்து இருக்கும் விஷயம்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜெனி சன் டிவியில் ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் திரையில் அறிமுகமானார். பின் சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி உள்ளார். இவர் தொகுப்பாளினி மற்றும் வீடியோ ஜாக்கியும் ஆவார். இப்படி பன்முக திறமை கொண்ட இவர் வாணி ராணி, அழகு முதலான பல சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் இவர், பாலிமர் டிவியில் ஒளிபரப்பான 'ராஜ மன்னார் வகையறா' தொடரில் லீட் ரோலில் நடித்தார். அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கி 'தமிழ் படம் 2' உள்ளிட்ட பல படங்களில் ஜெனி நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு, சொந்தமாக மேக்கப் ஸ்டூடியோ தொடங்கி செலிபிரட்டி மேக்-கப் மற்றும் மேக்-அப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது இவரை சிங்கப்பூரை சேர்ந்த பைலட் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியுள்ளார்.
ஜெனிப்ரியா திருமணம்:
அதாவது, ஜெனிப்ரியாவுக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பைலட் துநேசன் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் இவர்களுக்கு நலங்கு நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளவர் துநேஷன். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்து தான் ஜெனிப்ரியா அவரை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.
நின்று போன திருமணம்:
இந்நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் சிங்கப்பூரில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில், தற்போது ஜெனிப்ரியாவின் திருமணம் நின்று போய் விட்டதாகவும், மாப்பிள்ளை வீட்டாரிடம் 50 சவரன் நகை கொடுத்து ஜெனி ஏமாந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மேட்ரிமோனி மூலமாக தான் ஜெயப்ரியாவுக்கு இந்த திருமணம் ஏற்பாடு ஆகியுள்ளது. முதலில் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு 200 சவரன் நகை வரதட்சணையாக கேட்டுள்ளார்கள்.
200 சவரன் கேட்ட மாப்பிள்ளை வீட்டார்:
ஆனால், ஜெனிப்ரியாவின் வீட்டார் தங்களால் 100 சவரன் நகை தான் போட முடியும் என்று கூறியுள்ளார்கள். சமீபத்தில் நலங்கு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த தநேசன் குடும்பத்தினர், 100 சவரன் நகைகளை கொடுங்கள் இப்போதே சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்கிறோம், திருமண நேரத்தில் கொண்டு வந்தால் கஸ்டம்ஸ் பிரச்சனைகள் வரும் என்று கூறியதாக தெரிகிறது. முதலில் மறுத்த ஜெனிப்ரியா, பின் அவர்களிடம் 50 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துள்ளார்.
50 சவரன் நகைகளை ஏமார்ந்த ஜெனிப்ரியா:
அதன் பின்பு மாப்பிள்ளை குடும்பத்தார் நடவடிக்கையில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. அதனால் இனி இந்த கல்யாணம் செட்டாகாது என்று நினைத்து ஜெனிப்ரியா தெரிந்தவர்கள் மூலம் மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறிய போது, ஜெனிப்ரியாவை சிங்கப்பூருக்கு வரவழைத்து பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துள்ளார்கள். அப்போது அவர்களிடம் தன்னுடைய நகைகளை கேட்டதற்கு நீ நகைகளை கொடுக்கவில்லை என்று கூறி அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ஜெனி ப்ரியா சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.