ஹாரர் திரில்லர் பாணியில் வெளிவந்த 'ஜென்ம நட்சத்திரம்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜென்ம நட்சத்திரம். இந்த படத்தில் ஹீரோவாக தமன் குமார் நடித்திருக்கிறார். ஒரு நொடி என்ற படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ தமனின் மனைவி மல்வி மல்கோத்ரா. இவர் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு சில பயங்கரமான உருவங்களும் கனவில் வந்து போகிறது. ஹீரோ தமன், சினிமாவில் நல்ல இயக்குனராக வேண்டும் என்றும் தன்னுடைய முதல் படத்தை நினைத்து போல் எடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காளி வெங்கட் அரசியல்வாதிகளிடம் வேலை செய்கிறார்.
இவருடைய மகளின் மருத்துவ சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இந்த பணத்தை அரசியல்வாதிகளிடம் காளி வெங்கட் கேட்கிறார். ஆனால், அவர்கள் காளி வெங்கட்டை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்கள். இதனால் அரசியல்வாதிகளுடைய கருப்பு பணத்தை காளி வெங்கட் கடத்தி வைத்திருக்கிறார். இதை அறிந்த அந்த அரசியல்வாதிகள் காளி வெங்கட்டை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.
இதை அறிந்த காளி வெங்கட் ஒரு பாழடைந்த பங்களாவில் அந்த பணத்தை பதுக்கி வைத்து விடுகிறார். பின் இதை தமனின் நண்பர்களிடம் சொல்லிவிட்டு, தன்னுடைய மகளைக் காப்பாற்ற சொல்கிறார். பின் அந்த அரசியல்வாதிகள் காளி வெங்கட்டை கொன்றுவிடுகிறார்கள். பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மல்வி, அவருடைய நண்பர்கள் எல்லோருமே அந்த இடத்திற்கு செல்கிறார்கள். மல்வி கனவில் வரும் பயங்கரமான உருவங்கள் அந்த இடத்தில் பார்க்கிறார்.
அதே சமயம் பணத்தை தேடும் தமன் அந்த இடத்தில் சாத்தான் வழிபாட்டு முறைகளுக்கான தடையங்கள் எல்லாம் கண்டுபிடிக்கிறார். இன்னொரு பக்கம் தமனின் நண்பர்கள் பிரச்சனையில் சிக்குகிறார்கள். அவர்களை தமன் காப்பாற்றினாரா? தமன் மனைவியின் கனவுக்கும் அந்த இடத்திற்கும் என்ன சம்மந்தம்? காளி வெங்கட்டின் மகள் காப்பாற்றப்பட்டாரா? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
https://www.youtube.com/watch?v=0dHdJ-w3v6Y
படத்தின் ஹீரோ தமன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக மல்வி மல்கோத்ரா நடித்திருக்கிறார். இவருமே தனக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக முடித்து இருக்கிறார். படம் முழுவதையும் இவர்கள் இருவருமே சுமந்து சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். தமனின் நண்பர்கள், காளி வெங்கட் எல்லோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பரபரப்பாக செல்கிறது. அதை தங்களுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக காட்டி இருக்கிறார்கள்.
நடிகர்களுடைய நடிப்பில் எந்த குறையுமே இல்லை. அதோடு இந்த படம் ஆங்கிலத்தில் வெளிவந்த ஓமன் படத்தினுடைய தமிழ் ரீமேக் ஆகும். தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ப திரில்லர் எமோஷன்களுடன் இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். சில இடங்களில் சலிப்புகள் வந்தாலும் பெரிதாக அது கதை களத்தை பாதிக்கவில்லை. அதேபோல் கிராபிக்ஸ், ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக இருக்கிறது
கதாபாத்திரங்கள் வடிவமைத்த விதமும் நன்றாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதையை விறுவிறுப்பாகவும் திரில்லர் ஹாரர் பாணியிலும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். அது மட்டுமே இல்லாமல் படத்திற்கு பின்னணி இசை மிகப் பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. ஹாரர் படங்கள் என்றாலே பின்னணி இசை தான் படத்திற்கு இரண்டாவது ஹீரோ. அந்த அளவிற்கு சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார் சஞ்சய். சவுண்ட் எபெக்ட், எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் படம் சூப்பராக இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிகைகளின் நடிப்பு
திரைக்கதை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
சிறப்பான ஹாரர் திரில்லர் படம்
குறை:
சில இடங்களில் தொய்வு
முதல் பாதி பொறுமை
லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் ஜென்ம நட்சத்திரம் - த்ரில்லர் ஹாரர் ரசிகர்களுக்கு விருந்து