என்னை நம்ப வைத்து ஏமாற்றியது எஸ்.ஜே.சூர்யா தான் - ஆதாரங்களை வெளியிட்ட ஜின் பட இயக்குனர் டி.ஆர் பாலா
தன்னை அவமானப்படுத்திய நடிகர் பற்றி ஜின் பட இயக்குனர் டி.ஆர் பாலா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் முகென். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதன் பின் இவர் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி பாடி இருக்கிறார். தற்போது இவர் ஜின் – தி பெட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோ படத்தில் நடித்த பாவ்யா திரிகா நடித்திருக்கிறார்.
இந்த படத்தை டி.ஆர் பாலா இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பாலசரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே 30ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குழந்தைகள் கொண்டாடும் படமாக ஜின் இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் டி.ஆர். பாலா, நான் ஜிம் படத்தின் கதையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி சம்மதம் வாங்கி விட்டேன்.
ஜின் படம்:
இந்த படம் ஒரு பெரிய ஹீரோவிடம் போனது. கதையை கேட்ட அந்த ஹீரோவும் பிரமாதமாக இருக்கிறது. எப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்? நான் பார்த்த ஐந்து பெஸ்ட் இயக்குனர்களில் நீங்களும் ஒருவர் என்று சொல்லி தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் தொகையுமே வாங்கிக் கொண்டார். பின் அவர், கதையில் என்னுடைய ஸ்டைலுக்கேற்றவாறு சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் நாம் ஒரு ஐந்து முறை சந்தித்து இந்த கதையை எனக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யலாம் என்று சொன்னார். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை என்று இரண்டு வருடங்களாக எங்களுடைய சந்திப்புகள் நடந்தது.
விழாவில் டி.ஆர். பாலா:
கதையில் பல மாற்றங்களும் நடந்தது. இதற்கிடையில் அவருடைய நடிப்பில் வெளியான ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனால் தயாரிப்பாளர், அவருடைய படம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கிறது. உடனே அவரை சந்தித்து கால் சீட்டை வாங்கி படத்திற்கான வேலை ஆரம்பிக்கலாம் என்று வாங்கி சொன்னார். நானுமே தயாரிப்பாளர் உடன் சேர்ந்து அவர் இருக்கும் ஹோட்டலுக்கு போனோம். அங்கு போய் பார்த்தால் அவருடைய பாடி லாங்குவேஜ், பேசும் விதம் எல்லாமே வேற மாதிரி இருக்கிறது. வெற்றினுடைய மிதப்பில் பேசினார். தயாரிப்பாளரை உட்கார சொன்னார், என்னை உட்காரக்கூட சொல்லவில்லை.
https://www.youtube.com/watch?v=9eIeAQGEUqg
அவமானப்படுத்திய நடிகர்:
அதற்கு பின் நீங்கள் யார் என்று என்னை கேட்டார். உடனே நான், உங்களுக்கு கதை சொல்லி இரண்டு வருடங்களாக காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், தெரியாதது போல் நடித்து மீண்டும் கதையை சொல்லுங்கள் என்றார். நானும் சொன்னேன். அதற்குப் பின் கதையில் வரும் கதாபாத்திரங்களை பற்றி ஒரே நேரத்தில் நடித்து காண்பிக்க சொன்னார். அப்போது தான் அவர் என்னுடன் படத்தில் நடிக்க மாட்டார் என்பது தெரிந்தது. இன்னொரு விஷயத்தையும் செய்ய சொன்னார். ஆனால், என்னால் செய்ய முடியவில்லை. நீ சினிமா எடுப்பதற்கு தகுதி இல்லாத பையன் என்று கூறி என்னை அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார் என வேதனையில் கூறியிருந்தார்.
https://youtu.be/VN6IJvW3QEI?si=G7Xvx8zwgBqMSiN-
நடிகர் பற்றி சொன்னது :
இப்படி ஜின் பட இயக்குனர் சொன்னதை அடுத்து சோசியல் மீடியாவில் பல நடிகர்களுடைய பெயர்கள் பரவிக்கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் அந்த நடிகர் யார் என்று ஜின் பட இயக்குனர் டி.ஆர் பாலாவே கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா தான். இது தொடர்பாக ஜின் பட இயக்குனர் டி.ஆர் பாலா பிரத்தியோக பேட்டியும் கொடுத்திருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவால் தான் இரண்டு வருடம் பட்ட கஷ்டங்கள், அவமானங்களை எல்லாம் பற்றி கூறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் எஸ்.ஜே சூர்யாவுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் காண்பித்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி ஆகி வருகிறது.