சற்று முன் : பிரச்சாரத்தின் போது நடைபெற்ற சோகம்.! நடிகர் ஆர் கே ரித்தீஷ் காலமானார்.!

By Rajkumar · 13/4/2019

தமிழில் 'சின்னப்புள்ள' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், 2008-ல் வெளியான 'நாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதைத் தொடர்ந்து 'பெண்சிங்கம்' படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் ரித்தீஷ்.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியான படம் எல்.கே.ஜி. சமகால அரசியலைக் கேளிக்கை செய்த இப்படத்தில் ஜே.கே.ரித்தீஷ் இப்படத்தில் ராமராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். . சற்று முன்னர் எதிர்பாராத விதமாக இவர் மாரடைப்பால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள இவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ராமநாதபுரம் வந்த நிலையில், இவர் போகலூர் பகுதி நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். .

அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர்து உதவியாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரித்தீஷை தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரித்தீஷின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full