'கல்கி, புதிய அவதாரத்தை எடுத்துவிட்டார்' - குழந்தை பிறந்த விஷயத்தை குயூட் புகைப்படத்தின் மூலம் வெளியிட்ட ஐஸ்வர்யா.

By Arun · 17/11/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆடிய ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் என்று விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர். சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் ,மகாபாரத தொடர் போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.ஐஸ்வர்யா தொகுப்பாளினியாக தேர்வான சம்பவம் மிகவும் சுவாரசியமானது.

இதையும் பாருங்க : எதுவெனா தூக்கி காட்டுங்க, ஆனா - ஜெய் பீம் சர்ச்சை குறித்து பேசிய சந்தானம். வைரலாகும் வீடியோ.

உண்மையில் ஐஸ்வர்யாவின் சகோதரர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக சென்றுள்ளார். ஆனால், அவர் அந்த நேர்காணலில் தேர்வாகவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த ஐஸ்வர்யாவை தொகுப்பாளினியாக தேர்வு செய்துள்ளனர். அதன் பின்னர் இவர் தனது பயணத்தை தொகுப்பாளினியாக தொடர்ந்தார்.

ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டடார். திருமணம் முடிந்து 5 ஆண்டுகளை நெருங்கிய நிலையில் இவர் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு 'கல்கி புதிய அவதாரத்தை எடுத்துவிட்டார்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full