இப்படி இவரை துன்புறுத்தி, அரசியல் செய்ய வேண்டுமா ? - விஜய் பட இயக்குனரின் வேதனையான பதிவு.

By Arun · 17/8/2022

தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார்.அது மட்டுமில்லாமல் சமீபகாலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார்.

தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். விஜயகாந்துக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

நீக்கப்பட்ட மூன்று விரல்கள் :

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களுக்கும் அவருக்காக வேண்டினர்.

https://twitter.com/SandyTweetz_/status/1559162627342774273

வைரலான வீடியோ :

இப்படி ஒரு நிலையில் சிகிச்சைக்கு பின் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஜயகாந்த். அதில் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்துஇருந்தார். இப்படி ஒரு நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கேப்டனின் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் விஜயகாந்த் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி தன் கட்சி தொண்டர்களுக்கு கையசைத்து இருந்தார்.

https://twitter.com/Johnroshan/status/1559379248866963458

இயக்குனரின் பதிவு :

அவரை பார்த்து விஜயகாந்தின் தொண்டர்கள் பலரும் கதறி அழுதிருக்கிறார்கள். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தொண்டர்கள் வேதனைப்பட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை கண்டு சச்சின் பட இயக்குனர் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''மனதிற்கு கஷ்டமாக உள்ளது...இப்படி இவரை துன்புறுத்தி, அரசியல் செய்ய வேண்டுமா...அவர் இளைப்பாற விடுங்கள்...” என பதிவிட்டு இருக்கிறார்.   

Tamil Behind Talkies AMP · Quick view
View full