விஜய் கூட ஆடானது பூஜா, ஆனா ட்ரெண்ட் ஆனது இவங்க தான் - இணையத்தில் வைரலான 'அரபிக் குத்து' பாடகியின் மீம்ஸ்.

By Arun · 15/2/2022

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் முதல் பாடலான 'ஆரபிக் குத்து' பாடல் நேற்று வெளியானது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் நடிப்பில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'அரபிக் குத்து' என்ற பாடல் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

பூஜாவை விட ரசிகர்களை கவர்ந்த ஜோனிதா :

இந்த பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதி இருக்கிறார். நேற்று மாலை 6 மணிக்கு வெளியான இந்த பாடல் வெளியான சில மணி நேரத்தில் பல சாதனைகளை குவித்தது. இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடி இருக்கிறார்கள். மேலும், இந்த பாடலின் விஜய் - பூஜா ஹேக்டே ஜோடியை விட ஜோனிதாவை தான் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். மேலும், பூஜாவை விட ஜோனிதாவையே நாயகியாக போட்டு இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

வைரலாகும் ஜோனிதா மீம்ஸ் :

இந்த பாடல் வெளியானதில் இருந்தே பூஜா ஹேக்டேவை விட ஜோனிதாவின் மீம்கள் தான் அதிகம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோனிதா காந்தி தமிழில் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற 'செல்லம்மா' பாடலை கூட ஜோனிதா அனிருத்துடன் இணைந்து பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

செல்லம்மா மூலம் பிரபலமான ஜோனிதா :

அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ பாடல் வெளியான போதே அந்த பாடலில் இடம்பெற்ற ஜோனிதா இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். ஜோனிட காந்தி அவர்கள் இந்தோ- கன்னடிய பாடகி ஆவார். இவர் டெல்லியில் பிறந்து இருந்தாலும் தன்னுடைய ஏழு வயதிலேயே கனடாவிற்கு சென்றுவிட்டார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார்.

நடிகையாக என்ட்ரி கொடுப்பாரா ஜோனிதா :

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தான் பாடகியாக இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் பாடினார். இதற்குப் பிறகு இவர் 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா என பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் நடிகையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full