சிவகுமாரை தன் வாரிசு என்று அறிவிக்காததற்கு காரணம் இதுதான், சிவாஜி மகனை வெளுத்து வாங்கிய சேகுவேரா

By krithika · 18/12/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்து நான்கு வாரங்கள் மட்டுமே விளையாடி போட்டியாளர் சிவகுமார் வெளியேறினார். இவர் வேறு யாருமில்லை நடிகை சுஜா வருணியின் கணவர் ஆவார். அது மட்டும் இல்லாமல், இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். அதாவது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார். ராம்குமார், நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரி மீனம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ராம்குமார் மற்றும் மீனம்மாவிற்கு பிறந்தவர் தான் சிவகுமார்.

ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் இது குறித்து எந்த இடத்திலும் இதுவரை பேசியது இல்லை. சிவகுமார் தன்னுடைய மகன் என்று கூட அவர் குறிப்பிட்டது கிடையாது. சிவகுமார் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சிவகுமார் - சுஜா வருணி இருவரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்கள் ஆகும். இந்த ஜோடிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது கூப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர் சேகுவேரா பேட்டி:

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சேகுவேரா, சிவகுமார் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார். அதில், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரே மனைவி என்று ஒழுக்கமாக வாழ்க்கையை நடத்தியவர். அவரை நடிகை பத்மினியுடன் இணைத்து வைத்து பேசும்போது கூட, நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று பத்மினி வெளிப்படையாக கூறியிருந்தார். அதேபோல், சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபுவும் ஒரு நடிகையுடன் சர்ச்சையில் சிக்கியது நாம் அறிந்ததுதான். அதை சிவாஜி அதை பேசி தீர்த்து வைத்தார்.

ராம்குமார் குறித்து:

ஆனால், அவரின் நல்லவன் என்னும் போர்வையில் இருக்கும் சிவாஜியின் மகன் ராம்குமார், ஸ்ரீபிரியா அவர்களின் அக்காவுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். தற்போது அது அனைவருக்கும் தெரிந்து விட்டது. இப்படி இருக்கும்போது சிவகுமார் என் மகன் தான் என்று சொல்வதில் என்ன நடந்து விடப் போகிறது. ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகும், அந்தப் பெண்ணை ஏமாற்றுவது மிகப்பெரிய தவறு. அந்த சமுதாயத்தில் அந்த பையன் எப்படி வாழ்க்கை நடத்துவான். சிவாஜி கணேசன் போல் ஒருவருக்கு பிறந்தவர், ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்வது தவறான விஷயம்.

பாவம் சிவகுமார்:

பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, பெரிய குடும்பத்தின் மகன் என்பதற்காக எது வேணாலும் செய்யலாமா? இந்த பையன் சிவக்குமாரை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதை நான் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் சொல்லவில்லை. இந்த விஷயத்தால், ராம்குமாரின் பெயர் கெடவில்லை சிவாஜியின் பெயர்தான் கெடுகிறது. இதை அவர் மறைப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதாவது என்றாவது ஒருநாள் சொத்துக்கு பங்கு கேட்டு வந்து விடப் போகிறார் என்பதற்காக தான் சிவகுமாரை தன் வாரிசு இல்லை என்று ராம்குமார் மறைத்து வைக்க பார்க்கிறார்.

https://www.youtube.com/watch?v=bLFkJ9WA6b8&t=1s

மறைப்பதற்கு என்ன காரணம்:

ஆனால், இந்த விஷயத்தை எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும். இப்போது இணையத்தின் மூலம் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது. ராம்குமார் இது நாள் வரை தனது அப்பா சம்பாதித்து வைத்த சொத்தில் தான் வாழ்ந்து வருகிறார். சிவகுமாரை தன் வாரிசு என்று கூறிவிட்டால், சொத்தில் பங்குக்கு வந்து விடுவார் என்பதற்காக தான் அந்த விஷயத்தை அவர் மறைக்கிறார். சொத்துக் கொடுங்கள் கொடுக்காமல் போங்க, ஆனால் அந்த பையனுக்கு என் வாரிசு தான் என்று ஒரு அங்கீகாரத்தை கொடுங்கள் என்று சேகுவாரா ஆதங்கத்தோடு பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full