திடீரென மௌனம் பேசியதே சீரியலில் இருந்து விலகிய ஜோவிதா லிவிங்ஸ்டன் - அவரே சொன்ன குற்றச்சாட்டு
மௌனம் பேசியதே சீரியலில் இருந்து நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே உனக்காக சீரியலில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அதோடு இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான லிவிங்ஸ்டன் மகள் தான் ஜோவிதா லிவிங்ஸ்டன்.
இவர் முதலில் கலாசல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்தில் அம்பிகாவின் மகன் தான் நாயகனாக நடித்து இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதன் பின்னர் தான் இவர் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. பின் இடையில் இவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜோவிதா லிவிங்ஸ்டன் குறித்த தகவல்:
காரணம், தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ஜோவிதா லிவிங்ஸ்டன் கூறி இருந்தார். இவரை தொடர்ந்து சீரியல் கதையில் பல மாற்றங்கள் நடந்தது. அதன் பின் யாருக்கும் அறிவிக்காமலே இந்த சீரியலை முடித்து விட்டார்கள். இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அருவி என்ற தொடரில் ஹீரோயினியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்திருந்தது.
ஜோவிதா நடிக்கும் சீரியல்:
கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இதை அடுத்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மௌன பேசியதே என்ற தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடரை மகிழ் மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தொடரை தயாரித்து இருந்தது. இந்த தொடரில் கதாநாயகனாக ஜோவிதா லிவிஸ்டன் நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் ஒளிபரப்பானது.
மௌனம் பேசியதே:
இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஜோவிதா விலகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பலருக்குமே ஷாக் தான். இந்த நிலையில் இது தொடர்பாக ஜோவிதா அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக தான் நான் இந்த முடிவை எடுத்தேன்.
சீரியலை விட்டு விலக காரணம்:
துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை. ரொம்ப சுயநலமான நம்ம கலாச்சாரத்திற்கு எதிரான
ரோல் போல தான் அது இருக்கிறது. இதில் நடப்பது எனக்கு சரி என்று தோன்றவில்லை. கடந்த பல மாதங்களாக நான் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங்கும் toxic ஆக மாறி இருக்கிறது. வாழ்க்கை என்பது நேர்மை மற்றும் சுயமரியாதை உடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதை கடைபிடிக்க நான் அதிக முயற்சித்தாலும் முடியவில்லை. அதனால் நான் மௌனம் பேசியதே தொடரிலிருந்து விலகுகிறேன். நிச்சயம் இன்னொரு ப்ராஜெக்டில் சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.