கருவைக் கலைக்கச் சொல்லி என்னை தாக்கினார்- மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீசில் புகார் கொடுத்த ஜாய் கிறிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிசில்டா புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் பிரபலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.
இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய சமையல் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை:
தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா. சில மாதங்களுக்கு முன் இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிஸ்டா, சில போஸ்ட்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார்.
ஜோய் கிரிஸ்டலா-ரங்கராஜ்:
இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. அதோடு ஜோய் கிரிஸ்டலா தற்போது ஏழு மாதம் கர்ப்பம் இருக்கிறார். இருந்தும் இது தொடர்பாக ரங்கராஜ் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதன் பின் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று இருந்தார். இவர்களுக்கு விவாகரத்து ஆனதா? என்று கூட தெரியவில்லை. இவர்களை பற்றி பல கருத்துக்கள் இணையத்தில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிசில்டா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=-oK8_6kZmz0
ஜாய் கிறிசில்டா புகார்:
அதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிறிசில்டா, நானும் மாதம்படி ரங்கராஜூம் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒன்றாக தான் சேர்ந்து வாழ்ந்தோம். தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து தனியாக இருப்பதாக சொல்லித்தான் என்னிடம் அவர் பழகினார். சென்னையில் தான் நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தோம். இப்போது நான் ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எங்கள் திருமண கோவிலில் தான் நடைபெற்றது. திருமண புகைப்படம் எதையுமே சோசியல் மீடியாவில் போட வேண்டாம் என்று மாதம்பட்டி ரங்கராஜ் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
https://www.youtube.com/watch?v=YPMbVg7G-p4
ஜாய் கிறிசில்டா பேட்டி:
அதனால் தான் ஆரம்பத்தில் நான் அமைதியாக இருந்தேன். இப்போது என்னிடம் அவரை பேச விடாமல் தடுக்கிறார்கள். ஒன்றரை மாதமாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த குழந்தைக்கு அப்பா அவர்தான். எனக்கும் என்னுடைய குழந்தைக்கும் அவர் பதில் சொல்ல வேண்டும். அது தொடர்பாகத்தான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன். அதோடு கருவை கலைக்க சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார். நான் முடியாது என்று மறுத்தேன். அதனால் இரண்டு முறை என்னை அவர் அடித்தார். அவருடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.