சில ஆண்டுகளாகவே நாங்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்- மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஜாய் கிரிசில்டா பதிவு

By subhashini · 30/7/2025

கடந்த சில தினங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் இருந்து வருகிறார். இவர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய சமையல் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். பின் கடந்த ஆண்டு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப வாழ்க்கை பற்றிய சசெய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் தான் ஜாய் கிரிஸ்டா. இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் இவரை செய்வதாக கூறப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை:

இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் சில போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார். குறிப்பாக காதலர் தினத்தன்று மாதம்படி ரங்கராஜ் என்னுடன் தான் இருந்தார். உலகம் உயிர் அவர் தான் என்று அவர் கொடுத்த கிஃப்ட்டை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஜாய், தன்னுடைய பெயருக்கு பின்னால் ரங்கராஜ் என்ற பெயரையும் இணைத்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பாக ரங்கராஜ்-ஸ்ருதி எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by J Joy (@joycrizildaa)

ரங்கராஜ் இரண்டாம் திருமணம்:

மேலும், கடந்த வாரம் மாதம்பட்டி ரங்கராஜ், இப்படி ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக ஜோய் கிரிஸ்டலா போட்ட பதிவில், பேபி லோடிங் 2025. நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே ஜோய் கிரிஸ்டலா கர்ப்பம் ஆனதால் தான் இந்த அவசர அவசர திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே போல் முதல் மனைவியை மாதம் பட்டி ரங்கராஜ் விவாகரத்து செய்தாரா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

ஜோய் கிரிசில்டா பதிவு:

இதை எடுத்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோய் கிரிசில்டா, நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில வாழ்க்கை பயணத்தை அமைதியாக தொடங்க வேண்டி இருக்கிறது. கண்ணியத்துடனும் மிகுந்த அன்புடனும் நானும் ரங்கராஜ் அவர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன், மனைவியாக எங்கள் வாழ்க்கையை தொடங்கிவிட்டோம். எங்கள் அன்பின் அடையாளமாக இந்த ஆண்டு எங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் இவர்களின் உறவைப் பற்றி சுருதிக்கு தெரியுமா? தெரிந்து அமைதியாக இருக்கிறாரா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full