எடுத்த படமே இன்னும் வெளியாகலா அதுக்குள்ள ஜூலி செஞ்சத பாருங்க..!கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்.
https://twitter.com/lianajohn28/status/1074214665696079872
ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் நடித்துள்ள அம்மன் தாயி, உத்தமி, அனிதா எம் பி பி எஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார் ஜூலி. இதில் சமீபத்தில் வெளியான அம்மன் தாயி படத்தின் ட்ரைலரை பார்த்து அனைவரும் மரண கலாய் கலாய்த்தனர். தற்போது அனிதா எம் பி பி எஸ் படமும் பிரச்சனையில் உள்ளது.
https://twitter.com/lianajohn28/status/1074214665696079872
https://twitter.com/lianajohn28/status/1074214665696079872
ஜூலியின் எந்த படமும் இன்னும் வெளியாகாத நிலையில் தற்போது ஜுலி அடுத்த படத்தின் பூஜையை தொடங்கியுள்ளார். இந்த படத்தை எழில் துறை என்பவர் இயக்குகிறார். மேலும், ஜூலியின் துபாய் நண்பர் மார்க் ஹம்ரான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த தகவலை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதும் ஜூலியை ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.