விஷ்ணு விஷால் இரண்டாம் திருமணம் உறுதியானது. திருமண தேதி குறித்து அறிவித்த காதலி.

By Rajkumar · 1/4/2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுஇருந்தார்.

https://twitter.com/TheVishnuVishal/status/1243951566106685445

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து விஷ்ணு விஷால் இடம் பேட்டி எடுத்த போது அவர் கூறியது, நானும் ஜுவாலாவும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால் அவ்வப்போது சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் பழகி வருகிறோம். எனக்கு கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே இப்போது ரொம்ப பயமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் தோழியான ஜுவாலா, விஷ்ணு விஷால் மற்றும் தனுக்கு இருக்கும் உறவு குறித்து பிரபல பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், ஆம் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம் முன்பே சொன்னது போல இதில் மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, விஷ்ணு விஷாலின் இரண்டாம் திருமணம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் கொரோனா 144 உத்தரவால் தனிமையில் இருக்கையில் ஜுவாலா, தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘மிஸ்ஸிங் மை பூ’ என்று பிரிவில் வாடும் தொனியில் பதிவிட, “பரவாயில்லை. தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிலளித்திருந்தார் விஷ்ணு விஷால் என்பதும் குறிப்பிடத்தக்கத்து

Tamil Behind Talkies AMP · Quick view
View full