தஞ்சை கோவில் சர்ச்சையில் குறிப்பிட்ட அந்த மருத்துவனைக்கு லட்சங்களில் நிதியை வாரி வழங்கிய ஜோதிகா.

By Rajkumar · 8/8/2020

தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோயினியாக கலக்கியவர் நடிகை ஜோதிகா. ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார். பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

https://twitter.com/proyuvraaj/status/1255563581254483968

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்தது.அந்த விழாவில் ஜோதிகா அவர்கள் கூறியது, தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால் கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு கொடூரமாக இருந்தது.

எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க.அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்கள் என்று கூறியிருந்தார். ஜோதிகா, மருத்துவமனையை பராமரிக்க சொன்ன கருத்தை விட்டுவிட்டு கோவில் உண்டியலில் காசு போடாதீங்க என்று சொன்னதை பலரும் பெரிதாக எடுத்துக்கொண்டார்கள். இப்படி ஒரு நிலையில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாயை ஜோதிகா வழங்கியுள்ளார்.

குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைபதற்கும் ஜோதிகா இந்த பணத்தை வழங்கியுள்ளாராம். அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full