சூர்யா கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கும், தினமும் எங்களுக்கு சண்டை வரும் - ஜோதிகா சொன்ன சீக்ரெட்

By subhashini · 11/9/2024

சூர்யாவிடம் எனக்கு இது தான் பிடிக்காது என்று ஜோதிகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள். அதிலும் தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருந்தார்.

பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து பல போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

சூர்யா-ஜோதிகா திரைப்பயணம்:

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருக்கிறார்கள். அதோடு சமீப காலமாகவே ஜோதிகா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜோதிகா நடிக்கும் படங்கள்:

தற்போது ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சைத்தான்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இன்னும் இரண்டு பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்த படமும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் அடித்தது. தற்போது இவர் தமிழ், ஹிந்தி என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா -ஜோதிகா திருமண நாள்:

அதே போல் நடிகர் சூர்யாவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறனின் வாடிவாசல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'ரோலக்ஸ்' போன்ற பல படங்களில் நடிக்க இருக்கிறார். இது தவிர இவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி சூர்யா- ஜோதிகா இருவருமே சினிமாவில் பிசியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இன்று தங்களுடைய 18-வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

சூர்யா குறித்து சொன்னது:

இதற்காக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் சூர்யா- ஜோதிகாவிற்கு திருமண வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இந்த நிலையில் ஜோதிகா அளித்த பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் ஜோதிகா, என்னுடைய காதல் கணவர் சூர்யா செய்யும் பல விஷயங்கள் பிடிக்கும். ஆனால், என்னால் ஒரு சில விஷயங்கள் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதில் ஒன்று அவர் பாத்ரூமில் அதிக நேரம் இருப்பார். அதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. இதற்காக தினமும் காலையில் எங்கள் இருவருக்கும் இடையே சண்டையே நடக்கும் என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே கூறியிருந்தார் . தற்போது இவர் பேசியிருந்த பழைய வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full