3 மாதங்களில் 9 கிலோ எடை குறைப்பு, இவங்க தான் காரணம் - வெயிட் லாஸ் பற்றி மனம் திறந்த நடிகை ஜோதிகா

By subhashini · 24/4/2025

தன்னுடைய உடல் எடை குறைப்பு குறித்து நடிகை ஜோதிகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தான் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். பின் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே, தம்பி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

ஜோதிகா திரைப்பயணம்:

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார்.

ஜோதிகா நடிக்கும் படங்கள்:

அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி இருந்த ஸ்ரீகாந்த் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து இவர் தமிழில் லயன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதில் ஷபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷபானா பாண்டே ஆகியோர் நடித்து இருந்தார்கள். இதற்கிடையில் நடிகை ஜோதிகா அவர்கள் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜோதிகா உடல் எடை குறைப்பு:

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு அது தொடர்பாக ஜோதிகா வெளியிட்ட வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது அனைவரும் அறிந்ததே. இது குறித்து பலருமே ஜோதிகாவை பாராட்டியும் இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த அளித்த பேட்டியில் ஜோதிகா, நான் மூன்று மாதங்களில் 9 கிலோ எடையை குறைத்ததற்கும், என்னை நான் மீண்டும் கண்டுபிடிக்க உதவியதற்கும் நன்றி அமுரா. என்னை சரியான திசையில் வழிநடத்தியது நடிகை வித்யா பாலன் தான். அவரை தவிர வேற யாரும் இல்லை.

ஜோதிகா பேட்டி:

அக்டோபர் 2024ல் நடிகை வித்யா பாலன் ஜிம்முக்கு போகாமல் எப்படி உடல் எடை குறைப்பது என்று பற்றி பேசி அவருடைய பயண வீடியோவை வெளியிட்டு இருந்தார். வித்யா பாலனின் பயண கதையால் தான் நான் ரொம்பவே ஈர்க்கப்பட்டேன். எடை அதிகரிப்பு எப்போதுமே எனக்கு ஒரு போராட்டம் தான். கடுமையான உடற்பயிற்சியோ, ட்ரெட்மில்லில் மணி நேரம் ஓடுவது மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியம், செரிமானம், சீரான உணவு, முறையாக ஓய்வு எல்லாமே ரொம்ப முக்கியம். இது உடல் எடையை மட்டுமல்ல மனநிலையிலும் நிறைய மாற்றத்தை கொடுக்கும். இப்போது நான் பல ஆண்டுகளாக இருந்ததைவிட அதிக உற்சாகமாகவும், நம்பிக்கையுடன் இருக்கிறேன். எடை குறைப்பு பயிற்சி என்பது எதிர்காலத்திற்கான சாவி. குறிப்பாக பெண்களுக்கு இது ரொம்பவே முக்கியம் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full