கே ஜி எஃப் 2 படத்தில் எடிட்டராக இருக்கும் 19 வயது இளைஞர் குறித்த ஸ்பெஷலான தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் நேற்று கேஜிஎப் 2 படம் வெளியாகியுள்ளது. படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை தும்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

கே ஜி எஃப் 2 கதை:

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பக்கபலம் கொடுத்திருக்கிறது. மேலும், படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

கே ஜி எஃப் 2 படம் பற்றிய தகவல்:

விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு கே ஜி எஃப் 2 படம் ஒரு சிறந்த விருந்து வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்தப்படத்தில் எடிட்டராக பணி புரிந்த 19 வயது இளைஞன் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

கேஜி எப் 2 படத்தின் எடிட்டர் :

இந்த படத்தில் எடிட்டராக உஜ்வல் குல்கர்னி பணிபுரிந்திருக்கிறார். இவருக்கு தற்போது 19 வயதுதான் ஆகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு கே ஜி எஃப் பாடலை எடிட் செய்து அப்லோட் செய்திருந்தார். அந்தப்பாடல் சோஷியல் மீடியாவில் படு வைரலானது. இதைப் பார்த்த இயக்குனர் பிரசாந்த் நீல்க்கு, உஜ்வல் குல்கர்னி எடிட்டிங் மிகவும் பிடித்து போய்விட்டது. பின் அவர் 19 வயதான உஜ்வல் குல்கர்னியை அழைத்து தன்னுடைய கேஜிஎப் 2 படத்தின் டிரைலரை கட் செய்யும் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

Advertisement

உஜ்வல் குவியும் பாராட்டு:

அதை உஜ்வல் பிரமாதமாக செய்து முடித்து தந்தார். இதனால் மொத்த படத்திற்கான எடிட்டிங் வேலையுமே நீயே செய் என்று இயக்குனர் நம்பி உஜ்வல் குல்கர்னியிடம் ஒப்படைத்திருக்கிறார். மேலும், இயக்குனர் நினைத்ததைவிட கேஜிஎப் 2 படத்தில் மிக அருமையாக எடிட்டிங் வேலையை செய்திருக்கிறார் உஜ்வல். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து படம் பார்த்தவர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் உஜ்வல்பணியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement