அக்கா பிளைட்ல தான் சூட்டிங் போவாங்க, 5 கப்பலும் இருந்தது- கே.ஆர். விஜயாவின் சகோதரி பெருமிதம்

By krithika · 17/12/2024

தனது அக்கா நடிகை கே.ஆர்‌. விஜயா குறித்து கே. ஆர். வத்சலா பேட்டியில் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் மீண்டும் வைரல் ஆகி வருகிறது. 'புன்னகை அரசி' என்றால் எந்த காலமாக இருந்தாலும் நமக்கு நினைவில் நிற்கும் முதல் முகம் கே. ஆர்.விஜயாவின் முகம் தான். புன்னகை அரசி என்கிற மிகப் பொருத்தமான பட்டத்தோடு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து, மாபெரும் சாதனையாளராக விளங்கி வரும் நடிகை தான் கே.ஆர். விஜயா.

மேலும், இவர் 1970களின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப் பெரிய ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரு ஹீரோயின். கடந்த 1963 ஆம் ஆண்டு துவங்கிய இவருடைய கலைப்பயணம், இந்த 2024 ஆம் ஆண்டிலும் சின்னத்திரை நாடகங்கள் மூலம் தொடர்ந்து கொண்டு வருகிறது என்றால், இது ஒரு இமாலய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இவர் இந்த 60 ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு எண்ணற்ற சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வருகின்றார்.

கே. ஆர். விஜயா திரைப்பயணம்:

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். கடைசியாக இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த 'ராயர் பரம்பரை' என்னும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே இவர் 1966 ஆம் ஆண்டு மடத்தில் வேலாயுதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய கே. ஆர். விஜயா அப்போதே தனியாக ஜெட் விமானம் வைத்திருந்தார். ஆனால், அவரது கணவர் அவரைவிட பெரிய கை என்று கூறப்படுகிறது.

கே. ஆர். வத்சலா பேட்டி :

இந்நிலையில் சமீபத்தில் கே. ஆர். விஜயாவின் சகோதரி வத்சலா அவர்கள் இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், என்னுடைய அக்கா அந்த காலத்திலேயே தனி பிளைட் வச்சிருந்தாங்க. என்னுடைய அக்காவின் கணவர் இந்தியாவிலேயே பெரிய பிசினஸ்மேன். சுதர்சன் சிட்ஸ் என்று இந்தியா முழுவதும் 150 கிளைகள் இருந்தது. பெரிய பெரிய ஹோட்டல்கள் எல்லாம் இருந்தது. எங்க சினிமா கம்பெனி மட்டும் 88 படங்களை எடுத்து இருக்கிறது.

கே. ஆர். விஜயாவின் சொத்துக்கள் :

இந்த மாதிரி உலகம் முழுவதும் எங்க கம்பெனிகள் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு பிரபலமான பிசினஸ்மேன் ஒரு கப்பல் வாங்கறதோ, பிளைட் வாங்குவதோ பெரிய விஷயமே இல்லை. ஆனால், இந்த சொத்துக்களை பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டதில்லை. என் அக்கா ஷூட்டிங்குக்கு பிளைட்ல தான் வருவாங்க. நானும் படிக்கும்போது ஊட்டில இருக்கிற ஹாஸ்டல் போக கோயம்புத்தூர் வரை அந்த பிளைட்ல போவேன். எங்களுக்கு அதோட மதிப்பு அப்ப தெரியவில்லை. அதோடு நான்கு, ஐந்து கப்பல் கூட வைத்திருந்தார்கள்.

அக்கா குறித்து :

அது எல்லாம் யூனியன் பிரபலம் வந்தப்போ போயிடுச்சு என்று கூறி இருக்கிறார். அதோடு முதல் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கியதும் என் அக்கா தான். அந்த அளவுக்கு அவங்களுக்கு மார்க்கெட் இருந்தது. ஆனால், இடையில் என் அக்கா இறந்துவிட்டார் என்று வதந்திகள் வந்தபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏன்னா, அவங்க சீக்கரம் எழுவது, உடற்பயிற்சி செய்வது, பூஜை பண்றது என்று ரொம்ப ஆக்டிவா இருப்பாங்க. கடவுள் புண்ணியத்தில் இன்னும் ஏழு தலைமுறைக்கு அவங்க இன்னும் ராணி மாதிரி தான் இருப்பாங்க என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full