ஏன் அவர் புத்தி இப்படி மாறிடிச்சின்னு தெரியல - மனோபாலா குறித்து இளையராஜா சொன்ன விஷயம் குறித்து ராஜன்.

By Rajkumar · 7/5/2023

இசையமைப்பாளர் இளையராஜாவை தயாரிப்பாளர் கே ராஜன் வறுத்தெடுத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்பத்தில் இவர் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களை இயக்கினார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார். இதுவரை 14 படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கி இருக்கிறார்.

உடல்நலக் குறைவு :

மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மனோ பாலா சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் தேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு தற்போது வயது 69 தான் ஆகிறது.

இரங்கல் பதிவு:

மனோபாலாவின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் இளையராஜாவும் மனோ பாலாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருந்த நபர்களில் மனோ பாலாவும் ஒருவர் என்று பேசி இருந்தார். இளையரஜாவின் இந்த வீடியோவை கண்ட பலரும் இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி:

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றில் இளையராஜா குறித்து கூறியது, மனோபாலா முதலில் நண்பராகத்தான் பழகினார். அதற்கு பிறகு தான் தம்பியாக மாறிவிட்டார். என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியவர்களில் ஒருவர் ஐசரி வேலன், இன்னொருவர் மனோபாலா .அவர் எந்த யூனியனில் போட்டி போட்டாலும் ஜெயிப்பார். சிறுபட தயாரிப்பாளர்களுக்கு சொத்து மனோபாலா தான். அவர் ஜாதி மத வேறுபாடு இல்லாதவர். முதல் இயக்குனராக இருந்த மனோ பாலா நடிகராக மாறிவிட்டார்.

https://www.youtube.com/watch?v=ngeHjskG9xI

இளையராஜா குறித்து சொன்னது:

அதேபோல் மனோபாலா குறித்து இளையராஜா சொன்னதெல்லாம் பொய். கோடம்பாக்கம் பாலத்தின் மேலே நின்று பார்க்கிற அளவுக்கு மனோபாலா கிடையாது. இளையராஜா பிரசாத் லேப்பில் வாடகைக்கு இருந்த இடத்தை சொந்த இடம் என வழக்கு போட்டார். திரைப்பட தயாரிப்பாளர்கள் எல்லோரும் செலவு செய்து டியூன் போட சொன்னார். அந்தப் பாட்டெல்லாம் என்னோடது என காப்பிரைட் பிரச்சினையை உண்டாக்கி தயாரிப்பாளர்களுக்கு துரோகம் பண்ணவார். ஏன் அவர் புத்தி இப்படி மாறிவிட்டது என்று தெரியவில்லை. மனோபாலா மட்டுமில்லாமல் எந்த இயக்குனரும் கோடம்பாக்கம் பாலத்தில் அவருக்காக காத்திருந்தது கிடையாது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full