அஜித் சொல்லித்தான் கிளைமாக்சை மாற்றினேன்.! ஆனால், அந்த படம் படு ஹிட்.!

By Rajkumar · 2/5/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் அவர் நடிக்க தவறிய சில படங்களும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. பொதுவாக கதைகளில் அஜித் தலையிட மாட்டார் என்று பேச்சுக்களும் உண்டு. ஆனால்,கே எஸ் ரவிக்குமார் படத்தில் அஜித் சொல்லித்தான் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி அமைத்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

https://www.facebook.com/ThalaArmyOffcl1/videos/337013350187128/?epa=SEARCH_BOX

பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் அஜித்தை வைத்து வில்லன், வரலாறு என்று இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் .இதில் வரலாறு படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். அதிலும் காட்பாதர் என்ற தந்தை கதாபாத்திரம் அஜித்திற்கு தனிப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த படத்தில் தந்தை அஜித்தாக வரும் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் பெண்களைப் போன்று பாவனை, நடை ,உடை என்று மிகவும் நளினமாக நடித்திருப்பார். மேலும் ,அந்த கதாபாத்திரம் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்துவிடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதை அஜித் சொல்லித்தான் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மாற்றி அமைத்தாராம். ஏன் என்பதை அவரே கூறியுள்ளார் அதனை கேளுங்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full