என் அப்பா முதலைமைச்சர், இவங்க ரெண்டு பேரு தான் என்ன கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாங்க - காதல் மன்னன் நடிகை கொடுத்த ஷாக்.

By Arun · 7/10/2023

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்த படங்களிலேயே மிகவும் முக்கியமான படம் என்று சொன்னால் அது "காதல் மன்னன்" தான். அது மட்டும் இல்லாமல் தல அஜித் அவர்கள் சினிமா துறையில் இந்த அளவிற்கு புகழ் உச்சத்தில் இருப்பதற்கு முக்கியமான பங்கு என்று சொன்னால் 'காதல் மன்னன்' படத்தையும் சொல்லலாம். உண்மையிலேயே இவர் பெயர் திலோத்தமா என்று தான் அதிக பேர் நினைத்து இருக்கிறார்கள். ஆனால்,இவருடைய உண்மையான பெயர் மானு. நடிகை மானு அவர்கள் 1982 ஆம் ஆண்டு அசாமில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தில் பிறந்தவர்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால் கதக் ,பரத நாட்டியம் மற்றும் மணிப்பூர் ஆகிய பல கலைகளை கற்று அதில் சிறந்து விளங்கினார்.அதுமட்டும் இல்லாமல் மானு அவர்கள் மேடை நிகழ்ச்சிகளை கூட நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில் மானு அவர்களுடைய நடனத்தை பார்த்து நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய நண்பர் இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

அதன் பின்னர் தான் மானு அவர்கள் தல அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நடிகை மானு, ஒரு படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பேசப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு திலோத்தமா கதாபாத்திரம் இளைஞர்களை கவர்ந்தது. பின்னர் மானு அவர்கள் இந்த படத்திற்கு பின்பு வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. நடிகை மானு சினிமா உலகிற்கு வரும் போது வெறும் 16 வயது தான்.

அதோடு நடிகை மானு காதல் மன்னன் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மானு கூறியுள்ளதாவது, எனது குடும்பம் சினிமா பின்னணி கொண்டதில்லை, எல்லோரும் டாக்டர்கள் தான். என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன். பள்ளி படிக்கும்போதே கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தனர்.

அதிலும் விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்கவைத்தனர். படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் நான் அதில் மட்டும் அதன் பிறகு கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். என் கணவரும் தற்போது டாக்டராக தான் இருக்கிறார்இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. மேலும், ஒரு பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பு மற்றும் அஜித்தை போல ஒரு சக நடிகருடன் நடித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

22 ஆண்டுகள் கழித்தும் அந்த படம் இன்னமும் மக்கள் மனதில் பேசப்படுகிறது என்றால் அந்த பெருமை எல்லாம் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு தான் சேரும். அஜித் ஒரு சிறந்த நடிகர். அவர் மிகவும் எளிமையானவர்,நான் எப்போதும் அஜித்தின் பெற்றோர்களுடன் தான் இருப்பேன். என்னுடைய முதல் படம் என்பதால் அஜித் என்னை மிகவும் சவுகரியமாக வைத்துக்கொண்டார். இதையெல்லாம் விட அவர் அழகான நடிகர் என்பதை தாண்டி அவர் மிகவும் ஒரு சிறந்த மனிதர் அதனால்தான் எல்லோராலும் அவர் விரும்புகிறார் என்று கூறியுள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full