டாப் நடிகருடன் நடிக்க மறுத்த காலா பட நடிகை ஹுமா குரோஷி..!

By Rajkumar · 17/12/2018

இயக்குனர் ப ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'காலா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 

இந்த படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹுமா குரோஷி. சூப்பர் ஸ்டாருடன் நடித்த பிறகு அம்மணிக்கு மார்க்கெட் எகிறி தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும், அவர் மீது தென்னிந்திய இயக்குனர்கள் பார்வை திரும்பியது.  

இந்நிலையில் டோலிவுட் சீனியர் நடிகர் வெங்கடேஷ், நாக சைதன்யா இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஹுமாவுக்கு வாய்ப்பு தேடி வந்தது.
அப்பட இயக்குனர் கேஎஸ்.ரவிந்திரா, வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும்படி குரோஷியிடம் கேட்டார்.

அதற்கு அவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. நாக சைதன்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பட குழுவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ஹுமா தெரிவித்திருக்கிறாராம்.தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரேயா கமிட் ஆகியுள்ளாராம். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full