உள்ளாடையை ஜாக்கெட்டாக அணிந்து Transperant புடவையில் கடற்கரையில் போஸ் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை

By Rajkumar · 26/8/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'காற்றுக்கென்ன வேலி ' தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா. கர்நாடகாவை சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மைசூரில் தான் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர், கண்ணட சேனல் ஒன்றில் கிருஷ்ணா துளசி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த தொடர் கன்னடத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற தொடர்களிலும் நடித்து தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார்.

இந்த தொடர் மலையாளத்தில் ஒளிபரப்பான 'சாக்லேட்' என்ற சீரியலின் ரீ - மேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்தார்.

கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா. இவர் நடித்த அனைத்து சீரியலிலும் இவர் மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால், நிஜத்தில் அம்மணி படு மாடர்ன் பேர்வழி தான்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக படு ஹோம்லியாக இருக்கும் இவர் மாடல் அழகி என்பதால் படு கவர்ச்சியான உடைகளில் கூட போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார். அந்த வகையில் இவர் உள்ளாடை அணிந்து புடவை கட்டிக்கொண்டு படு கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full