கன்னட மொழியில் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் கப்ஸா. இந்த படத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஆன உபேந்திரா, சுதீப், சிவராஜ் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சந்துரு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஸ்ரேயா சரண், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரவி பஸ்சூர் இசையமைத்திருக்கிறார். கன்னட மொழியில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் கப்ஜா படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

கதைக்களம்:

படத்தில் 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1971 ஆம் காலகட்டத்தில் நடைபெறும் காட்சிகளாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர் உடைய மகன் உபேந்திரா. இவர் விமானப்படையில் பயிற்சி முடித்துவிட்டு பணிக்கு செல்வதற்கு முன் தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார். அவருடைய கிராமம் அமராபுரம். அங்கு தொடங்கி பல இடங்களிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு பின் மகதூர் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் இருக்கிறார்கள். இதற்கிடையில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

Advertisement

பின் பகதூர் சாம்ராஜ்யத்திற்கு அமராபுரம் தொகுதியில் கலீல் ராஜாவாக இருக்கிறார். இவர் தேர்தலில் தன் மகனை களம் இறக்க திட்டமிட்டு வெளிநாட்டில் இருந்து அழைத்து வருகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக உபேந்திரா கலில் மகனை கொன்று விடுகிறார். இதனால் ஆவேசம் அடையும் கலில் பழிக்கு பலியாக உபேந்திரா அண்ணனை கொள்கிறார். தன் அண்ணன் மரணத்திற்கு பலித்தீர்க்க களம் இறங்கினார் உபேந்திரா. இறுதியில் உபேந்திரா எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்? என்பதே படத்தின் மீதி கதை.

படம் முழுக்க உபேந்திரா மீது தான் நகர்கிறது. கேஜிஎப் இன்ஸ்பிரஷனில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆனால், மொத்த கேமரா, திரைக்கதை, இசை என எல்லாமே காப்பி அடித்தால் எப்படி? படம் முழுக்க பத்து பதினைந்து பேரை சுட்டுக் கொள்வதும், வெட்டி கொள்வதும் என்று இருக்கிறார்கள். உபேந்திரா சாதுவாக அமைதியாக இருந்து மாவீரனாக மாறுவது தான் கதை. ஆனால், அதற்காக வீடியோ கேம் டாஸ்க் போல கலீல், பகிரா என பெரிய பெரிய டான்களை எல்லாம் இறக்குவதெல்லாம் சினிமாத்தனமாக இருக்கிறது.

Advertisement

படத்தினுடைய இசை கே ஜி எஃப் சி இசை போல தான் இருக்கிறது. இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை என்றே சொல்லலாம். தமிழ் டப்பிங்கில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. காரணம், அவ்வளவு கதாபாத்திரங்களின் பெயர்கள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. ஆனால், படத்தில் சுவாரசியத்தை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க கொஞ்சம் அதிகமாகவே வன்முறை காட்சிகள் நிறைந்து இருக்கிறது. டெக்னிக்கல் வேலைப்பாடு மட்டுமே படத்திற்கு ஆறுதலாக இருக்கிறது.

Advertisement

அதேபோல் ஸ்ரேயா சரணுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. இருந்தாலும், அவருடைய அழகு இன்னும் குறையாமல் ஸ்கிரீனில் காட்சியளித்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் வந்திருந்தாலும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இந்த படத்திற்காக இயக்குனர் நான்கு வருடம் காத்திருந்தால் என்று சொன்னால் கொஞ்சம் வேடிக்கைத்தனமாக தான் இருக்கிறது. கே ஜி எஃப், காந்தாரா போன்ற கன்னட சூப்பர் ஹிட் படங்கள் மத்தியில் இந்த படம் கொஞ்சம் சொதப்பல் தான்

நிறைகள் :

படத்தின் ஒளிப்பதிவு

சில வசனங்கள் நன்றாக இருக்கிறது

ஒன் மேன் ஆர்மியாக படத்தை கொண்டு சென்று இருக்கிறார் உபேந்திரா.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறைகள் :

இசை, எடிட்டிங், கேமரா, திரைக்கதை எல்லாமே காப்பி அடித்தது போல் இருக்கிறது

ரசிகர்கள் மத்தியில் சலிப்பை தட்டி இருக்கிறது

சுட்ட தோசை திருப்பி சுட்டு இருக்கிறார் இயக்குனர்

தேவையில்லாத பல கோடி பட்ஜெட் செலவு

மொத்தத்தில் கப்ஜா- கப்சா

Advertisement