"கடைசி விவசாயி" பட தாய்க்கு நேர்ந்த சோகம். குடிகார மகனே எமனான கொடூரம். உசிலம்பட்டியை உலுக்கிய சம்பவம்.
கடைசி விவசாயி பட நடிகையை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் மணிகண்டன் இயக்கி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்த படம் “கடைசி விவசாயி”. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருந்தது.
இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. மேலும், படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருந்தார்கள். மண்பானை செய்வதில் தொடங்கி, அரிசி, திருவிழாவுக்கான இசைக்கருவிகள் என அனைத்து விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன விவசாயமாக மாறியது என பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
கடைசி விவசாயி படம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடைசி விவசாயி படத்திற்கு பல விருதுகளும் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்திய அளவில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் நல்லாண்டியின் தங்கையாகவும் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தவர் காசம்மாள்.
https://www.youtube.com/watch?v=fFx_dP3c5ao
காசம்மாள் குடும்பம்:
இவர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர். இவர் கணவர் பால்சாமி. காசம்மாள் விவசாயக் கூலி தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு நாமகோடி, தனிகொடி என்று இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். காசம்மாளின் மூத்த மகன் நாமகோடி தன்னுடைய மனைவியுடன் ஏற்படுத்த கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக தனியாக தான் தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. எப்போதுமே இவர் மது போதையில் தான் இருப்பார்.
காசம்மாள் மகன் செய்யும் அட்டுழியம்:
அதோடு அடிக்கடி குடிக்க பணம் கேட்டு இவருடைய தாய் காசம்மாளிடமும் சண்டை போட்டு இருக்கிறார். காசம்மாள் பணம் கொடுக்கவில்லை என்றால் அவருடன் பயங்கரமான தகராளிலும் நாமகோடி ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் பிப்ரவரி நான்காம் தேதி அதிகாலை 3 மணி அளவில் காசம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காசம்மாளை எழுப்பி வழக்கம் போல நாமகோடி குடிக்க பணம் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. காசம்மாள் பணம் தர மறுத்ததால் கோபத்தில் நாமகோடி அவரை கட்டையால் தாக்கியிருக்கிறார்.
காசம்மாள் இறப்பு:
இவருக்கு தலையில் பழுத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பின் காசம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்து இருக்கிறார். மேலும், காசம்மாள் அலறும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு காசம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். தாயையே கட்டையால் அடித்துக் கொன்ற நாம கோடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.