3 மணிநேரம் விஜய் சந்திப்பு, வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் - ஆதாரத்துடன் கடம்பூர் ராஜு சொன்ன விஷயம்
தவெக தலைவர் விஜயை விமர்சித்து கடம்பூர் ராஜூ பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தவெக கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் விலகி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். பின் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றை கடம்பூர் ராஜூ நடத்திருக்கிறார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜூ, மெர்சல் படம் வெளியாகும் போது நிறைய பிரச்சனை வந்தது. அப்போது நான் தான் அமைச்சராக இருந்தேன். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். பொதுவாக படங்கள் வெளியாக வேண்டும் என்றால் அதில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்று கொடுக்க வேண்டும். அதனால் மெர்சல் படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் என்று கூறியிருந்தார்கள்.
கடம்பூர் ராஜூ பேட்டி:
இதனால் விஜய் எங்களிடம் வந்தார். அரை மணி நேரம் ஒரு மணி நேரம் எல்லாம் இல்லை.
மொத்தமாக மூணு மணி நேரம் இந்த விஷயத்தைப் பற்றி அமர்ந்து விஜய் எங்களிடம் பேசி இருந்தார். அப்போது தீபாவளி நேரம். படம் ரிலீஸ் ஆனால் 140 கோடி வசூலாகும் என்று சொன்னார். இதில் சிக்கல் இருந்தது. விலங்குகள் நல வாரியம் தொடர்பான அலுவலகம் சென்னையில் இருந்தது. அதனுடைய வியாபாரிகள் வியாழக்கிழமை மட்டுமே கூடுவார்கள்.
மெர்சல் சர்ச்சை:
அதில் தான் சான்று வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும். ஆனால், புதன் கிழமை தீபாவளி. செவ்வாய்க்கிழமை படம் ரிலீசாக வேண்டும். இதனால் விஜய் உதவி செய்யுங்கள் என்று எங்களிடம் கேட்டு வந்தார். அவர் கேட்டு வந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. எப்படி இதை செய்வது? திரைப்படத்திற்கு எப்படி சான்று வழங்குவது? என்றெல்லாம் யோசித்தோம். உடனே எடப்பாடி பழனிசாமி, விஜய் நம்மை தேடி வந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி முயற்சிகளை செய்தார்.
https://www.youtube.com/watch?v=3bexLZC7aRE
விஜய் பற்றி சொன்னது:
டெல்லியில் இதற்காக பேசினோம். அடுத்த நாள் திங்கட்கிழமை அதிகாரிகளை கூட்டி திரைப்படத்திற்கு சான்று கிடைத்தது. இது அடுத்து செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி படமும் வெளியானது. இப்படி மெர்சல் படம் பிரச்சனையில் இரவோடு இரவாக அதிமுக ஆட்சியில் பேசி ஒரு தீர்வு கண்டோம். அதற்காக விஜய், வாழ்நாள் முழுவதும் நன்றி கடனோடு இருப்பேன் என்று சொன்னார். ஆனால் இப்போது அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார். விஜய் அரசியலுக்கு வர வேண்டாம். அவர் மீண்டும் நடிக்க வந்தாலும் அவருடைய படம் வெளிவர எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறி இருக்கிறார்