சினிமாவை பொறுத்த வரை ஒரு சிலபுது முக நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகும் போது அது நல்ல படமாகவே இருந்தாலும் அதை நாம் கண்டுகொள்ளாமல் இருந்திருப்போம். அப்படி மிஸ் செய்யப்பட்ட படங்களை நாம் போர் அடிக்கும் போது இணையத்திலோ டிவியிலையோ பார்த்துவிட்டு ‘ச்ச இந்த படத்தை எப்படி தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டோமே’ என்று வருந்தியும் இருப்போம், அப்படிபட்ட படம் தான் நாம் தற்போது விமர்சனமாக பார்க்க இருக்கும் ‘கடைசீல பிரியாணி’ திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த மாதமே திரையரங்குகளில் வெளியாகிவிட்டது.

Netflixல் வெளியீடு :

ஆனால், இப்படி ஒரு படம் வந்தது கூட யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த படம் Netflixல் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலர் இந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் படத்தை பற்றி எழுத் ஆரம்பித்துவிட்டனர். அப்படி என்ன தான்பா இந்த படம் என்ற விமர்சனத்தை தற்போது காணலாம். இயக்குனர் நிஷாந்த் களிதிண்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கடைசீல பிரியாணி. இந்த படத்தை ஒய்நாட் எக்ஸ், மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜுடா பால் – நீல் செபாஸ்டியன் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்தில் வசந்த் செல்வன், ஹக்கீம் ஷாஜகான், விஜய் ராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Advertisement

கதைக்களம்:

படத்தில் ஒரு ஊரில் அப்பா, மகன்கள் மூன்று பேர் வாழ்ந்து வருகிறார்கள். அப்பா கேரளா ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். பின் அங்கு ரப்பர் எஸ்டேட் ஓனருக்கும் ஹீரோ அப்பாவுக்கும் இடையே தகறாரு ஏற்படுகிறது. இதனால் ரப்பர் எஸ்டேட் ஓனர் ஹீரோ அப்பாவை கொன்று விடுகிறார். பின் தங்களின் அப்பாவை கொன்ற கேரள ரப்பர் எஸ்டேட் ஓனரை தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மூன்று மகன்கள் திட்டம்போட்டு பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்று அவரை கொல்ல செல்கிறார்கள்.

திட்டமிட்டபடி அந்த மகன்கள் ரப்பர் எஸ்டேட் ஒனரை கொண்டாற்களா? இல்லையா? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்?என்பதே படத்தின் மீதிக்கதை. முதல் பாதி முழுவதும் அண்ணன், தம்பிகள் மூவரும் அந்த எஸ்டேட் ஓனரை தேடுவதிலேயே படம் நகர்கிறது. பின் எஸ்டேட் ஓனர் கொல்லப்படுகிறார். எஸ்டேட் ஓனரை கொலை செய்து விட்டு ஓடும் அவர்களிடம் விதி விளையாடுகிறது. கடைசியில் ஹீரோ மட்டும் தப்பி காட்டுக்குள் செல்கிறார்.

Advertisement

தன் அப்பாவை கொண்டவர்கள் போலீஸ் உதவியுடன் ஓனரின் மகன் பழிவாங்க துடிக்கிறார். இரண்டாம் பாதி பல பயங்கர சுவாரஸ்யத்துடன் கதை செல்கிறது. மேலும், பல இடங்களில் கைதட்டல் வாங்கும் அளவிற்கு காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படத்தில் அண்ணன் தம்பிகளாக வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வசந்த் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசி தம்பி விஜய் ராம் படத்தின் நாயகனாகவும், கதைக் களத்திற்கு அப்பாவியாகவும் வருகிறார்.

Advertisement

தம்பி விஜய் ராம் ஓனரின் மகன் ஹக்கீம் ஷாஜகான் இடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தினுடைய உச்சகட்ட சுவாரசியம். படத்தில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் பின்னணி இசையும், பிஜிஎம் எல்லாமே அற்புதமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் நகைச்சுவை காட்சிகளும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும், ஒரு காடு அதை சுற்றி நடக்கும் கதை, பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் என்ற ஆக்ஷன் திரில்லர் பாணியில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் எடுத்த கதைகளம் அருமையாக வந்திருக்கிறது. அந்த சூழலுக்கு ஏற்ப பின்னணி இசை ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் கடந்த மாதமே திரையரங்களில் வெளியானது. ஆனால், இது யாருக்குமே தெரியவில்லை. மீண்டும் இந்த படத்தை netflix வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் கதை களமும் கொண்டுபோன விதமும் அருமையாக இருப்பதால் படம் சூப்பராக உள்ளது. புதுமுகம் என்பதால் பார்ப்பதற்கு தயக்கம் காட்டாமல் யாரும் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கதைக்களம் அருமை சூப்பர்.

வித்தியாசமான முறையில் இயக்குனர் கதையை கையாண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்கபலமாக உள்ளது.

மைனஸ்:

புதுமுக நடிகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஈர்க்கவில்லை என்று சொல்லலாம்.

படத்தில் காமெடிகள், அதிரடி சண்டைக்காட்சிகள் அழுத்தமாக இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு குறையும் இல்லை.

மொத்தத்தில் கடைசீல பிரியாணி — அருமையான சுவையில் வந்திருக்கிறது.

Advertisement