கூவத்தூரில் காதல் சந்தியா நடித்தி வரும் ரிசார்ட்டில் ரூம் புக் செய்த காதல் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி - போலீசில் புகார்.

By subhashini · 23/5/2023

நடிகையின் லாட்ஜில் பெண் ஒருவர் அலறிய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சந்தியா. இவர் 2004 இல் வெளியான காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படத்திற்கு பின்னர் இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் இதுவரை டிஷும், வல்லவன், கூடல் நகர், தூண்டில், வெள்ளித்திரை, யா யா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருடைய கணவர் சொந்தமாக ரிசார்ட் ஒன்றை வைத்து இருக்கிறார். இது சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகில் இருக்கிறது. இந்த ரிசார்ட்டை நடிகை சந்தியாவின் கணவர் தான் நிர்வகித்து வருகிறார்.

மேலும், இந்த ரிசார்ட்டில் காதல் ஜோடிகளும், நண்பர்களும் தங்கி செல்வார்கள். அந்த வகையில் ராமச்சந்திரன் என்ற இளைஞர் தன்னுடைய காதலியுடன் இந்த ரிசார்ட்க்கு வந்திருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இவர்களுடன் ராமச்சந்திரனின் நண்பர்கள் ஆறு பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். மொத்தம் மூன்று ரூம்களை புக் செய்து இருக்கிறார்கள். ஒரு அறையில் இராமச்சந்திரன் அவருடைய வருங்கால மனைவியுடன் தங்கி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=wXn_JSPSOQ8

மற்ற அறையில் நண்பர்கள் தங்கி இருக்கிறார்கள். முதல் நாள் இந்த ரிசார்ட்க்கு அருகில் பீச்சும் இருக்கிறது. இதனால் ஜாலியாக பொழுதுபோக்கை கழிக்க ராமச்சந்திரன் தன்னுடைய வருங்கால மனைவியுடன் வந்திருக்கிறார். பின் இரவு நேரம் அவரவர்கள் ரூமுக்கு சென்று இருக்கிறார்கள். சம்பவத்தன்று இரவு இரண்டு மணிக்கு காதலர்கள் அறைக்கு சுபாஷ் என்ற நபர் உள்ளே நுழைந்து இருக்கிறார். படுக்கையில் காதலன் காதலி இருவருக்கும் நடுவில் சுபாஷ் படுத்திருக்கிறார். பின் அவர் அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்திருக்கிறார்.

இதனால் கண்விழித்து பார்த்த அந்த பின் கூச்சலிட்டு இருக்கிறார். பின் அருகில் இருந்த அந்த பெண்ணின் காதலர் சத்தம் போட்டு மற்றரூமில் இருந்த தங்களுடைய நண்பர்கள் எல்லாம் அழைத்து சுபாஷை சுற்றிவைத்து தர்ம அடித்திருக்கின்றனர். அவரை போலீஸிடம் ஒப்படைத்தும் இருக்கின்றனர். போலீசார் விரைந்து வந்து சுபாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கின்றனர். சுபாஷிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது அவர் அந்த ஹோட்டலில் வேலை செய்பவர் என்று தெரிய வந்தது.

இவர் இந்த ரிசாட்டிற்கு வந்து செல்லும் பெண்களை வீடியோ எடுத்து அதை தன்னுடைய செல்போனில் வைத்து வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நிறைய ஆபாச வீடியோக்களையும் இவர் போனில் வைத்திருக்கிறார். இந்த ரிசார்ட்டை பொறுத்தவரை அறையின் உட்பக்கம் தாழ்ப்பாள் போட்டு கொண்டாலும் வெளியில் இருந்து கதவை திறக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு இவர் யாருக்கும் தெரியாமல் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்து சில்மிஷ வேலைகளை செய்திருக்கிறார். தற்போது சுபாஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full