எப்படியும் வாழலாம்னு நினைச்ச எனக்கு சரியான அடி - கண்ணீர் மல்க காதல் சுகுமார் அளித்த பேட்டி

By subhashini · 27/1/2025

தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு காதல் சுகுமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் காதல் சுகுமார் சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்களிடையே பிரபலமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இதுவரை இவர் தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இருந்தாலுமே இவருடைய கதாபாத்திரங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். அந்த படங்களும் தோல்வி அடைந்தது. அதற்குப்பின் இவர் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் புகார் கொடுத்திருந்தார். அஅதில் அவர், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. ஆனால், நான் கணவரை விட்டு பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். அதற்கு பிறகு தான் காதல் சுகுமாருடன் நட்பு ஏற்பட்டது.

சுகுமார் மீது புகார்:

நாங்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். பின் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் சொன்னார். மூன்று வருடங்களாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கும்போதுமெல்லாம் அவர் தாமதம் செய்து வந்தார். அதோடு என்னுடைய நகை, பணம் எல்லாத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டார். இப்போது திருமணம் பற்றி பேசினால், நீ ஏற்கனவே திருமணம் செய்தவள். என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சாக்கு சொல்லி தப்பிக்கிறார். என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி இருந்தார். இதை அடுத்து அந்த துணை நடிகை பேட்டியும் அளித்து இருந்தார். அதில் அவர் சுகுமார் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

சுகுமார் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காதல் சுகுமார் அளித்த பேட்டியில், சில
தினங்களாகவே என்னை பற்றி சோசியல் மீடியாவில் வெளிவந்த செய்திகள் எல்லாம் பார்த்து என்னுடைய குடும்பத்தினர் ரொம்பவே வேதனைப்பட்டு இருக்கிறார்கள்.சில youtube சேனல்களில் என்னை ரொம்பவே மோசமானவனாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒரே துறையில் இருக்கிறவர்கள் பழகுவது, சேர்ந்து ஊடகங்களில் வீடியோ போடுவது எல்லாமே எல்லா இடத்திலும் நடக்குவது தான். ஆனால், இங்கு பிரச்சனையே வேறு.

https://www.youtube.com/watch?v=jwn65Nzsrtc

துணை நடிகை பற்றி சொன்னது:

நான் என்னுடைய குடும்பத்தை விட்டு அவங்க கூடவே தங்கிடனும் என்று சொன்ன போதுதான் ப்ரச்சனை வந்தது. ரெண்டு பேருமே ஏற்கனவே கல்யாணமானவர்கள். அவர்களுக்கு காலேஜ் போற வயதில் பொண்ணு இருக்காங்க. எனக்கும் குழந்தைகள் இருக்கிறது. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் என்று நான் தயங்கினேன். ஆனால், அவர்கள் இஷ்டத்துக்கு பேசி விட்டார்கள். இப்போது நான் பக்தி படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த நேரத்தில் இப்படியான செய்தி என்னை நம்பி படம் போட்ட தயாரிப்பாளர் உட்பட என்னுடைய ரசிகர்கள் எல்லாரிடமும் ரொம்ப கவலையை உண்டாக்கி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=XXtJaMplFFk&t=13s

சுகுமார் சொன்ன விஷயம்:

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் நான் இப்போ சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்துக்காக மனப்பூர்வமாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு நல்லதொரு பாடம். எனக்கு நிகழ்ந்த இந்த மாதிரி பிரச்சனை உங்க யாருக்கும் நிகழக்கூடாது. தயவு செய்து உங்களுடைய அந்தரங்க விஷயங்களை படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். இப்படித்தான் வாழனும் என்று நினைக்காமல் எப்படியும் வாழலாம் என்று நினைத்ததால் எனக்கு சரியான அடி விழுந்திருக்கிறது. இந்த துயர நாட்களில் இருந்து சீக்கிரம் வரணும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full