தலைபாடாய் பிரியங்கா அடித்து கொண்டார், ஆனால் ரோபோ சங்கர் - காதல் சுகுமார் சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருந்தவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.
இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார்.
ரோபோ சங்கர் உடல்நிலை:
சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கர் சென்னையில் சினிமா சூட்டிங்கில் மயங்கி கீழே விழுந்திருந்தார். இதனால் பதறிப் போன பட குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=paJfvsdVUio
காதல் சுகுமார் பேட்டி:
இது ஒரு பக்கம் இருக்க, ரோபோ சங்கரின் மரணம் பற்றி பல பிரபலங்கள் அவர்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கரின் நீண்ட நாள் நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் அளித்த பேட்டியில், ரோபோ சங்கர் ரொம்ப நல்ல மனிதர். ஷங்கரை பற்றி எப்போதாவது அவருடைய மனைவி பிரியங்காவிடம் கேட்பேன். அப்போது அவர், சங்கருக்கு எவ்வளவு தான் சொல்வது என புரியவில்லை என்று ரொம்ப வேதனையாக பேசுவார்.
https://www.youtube.com/watch?v=QvFCDTuwTog
சங்கர் இறப்பு பற்றி சொன்னது:
சங்கரை குடிப்பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர பிரியங்கா ரொம்ப முயற்சித்தார். ப்ரியங்கா, சங்கரிடம் பேசாமல் இருந்தார், சாப்பிடாமல் இருந்தார், தலைப்பாக அடித்துக் கொண்டார். ஆனால், சங்கர் கேட்கவே இல்லை. அதேபோல் ரோபோ சங்கருக்கு இலங்கையில் அதிகம் நண்பர்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்பு இல்லை என்றாலே அவர் இலங்கை சென்று விடுவார். சமீபத்தில் கூட அவர் அங்கு போய் வந்தார். அங்கு ஒரு பார்ட்டில் இவர் கலந்து கொண்டது தான் இவருடைய உயிரே போனதுக்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.