காமெடி கலந்த காதல் பாணியில் வெளிவந்த 'கடுக்கா' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 31/8/2025

இயக்குனர் எஸ் எஸ் முருகராசு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கடுக்கா. இந்த படத்தை கௌரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் கௌரிஸ், ஆதர்ஷ், ஸ்மேகா, கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கெவின் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஹீரோ விஜய் கௌரிஸ் வாழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய தாய் அரவணைப்பில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் பெண்களை சைட் அடிப்பதே ஒரு வேலையாக வைத்திருக்கிறார். இவரின் நண்பர் ஆதர்ஷ். ஹீரோ விஜய் வீட்டுக்கு எதிரே புதிதாக ஹீரோயினி ஸ்மேகா குடி வருகிறார். கண்டதும் காதல் என்பது போல ஸ்மேகாவை பார்த்த உடனே ஹீரோ விஜய் அவரை பின்தொடர்ந்து காதல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் விஜய் நண்பர் ஆதர்ஷும் ஸ்மேகாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக அவரிடம் சொல்கிறார். விஜய் காதலை ஏற்றுக் கொள்ளும் ஸ்மேகா, ஆதர்ஷ் காதலையும் ஒத்து கொள்கிறார். பின் நண்பர்கள் இருவருமே ஒரே பெண்ணை காதலிப்பது ஒரு கட்டத்தில் தெரியவந்து சண்டை போடுகிறார்கள். இறுதியில் ஸ்மேகா இருவரையும் காதலிப்பதாக சொல்வதற்கு காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? ஸ்மேகா யாரை திருமணம் செய்து கொண்டார்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

ஹீரோ விஜய் கௌரிஷ் பொறுப்பில்லாமல், அப்பாவியான முகத்தை வைத்து பெண்கள் பின்னால் சுற்றும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் நாயகி ஸ்மேகா, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக செய்து இருக்கிறார். கிராமத்து பெண்ணாகவே இவர் நடித்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் இன்னொரு நாயகனாக ஆதர்ஷ் வந்திருக்கிறார்.

இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இளைஞர்களின் எதார்த்தமான வாழ்வை காமெடி கலந்து இயக்குனர் சொல்லி இருக்கிறார். 2005 ஆம் காலகட்டத்தில் தான் கதை நகர்கிறது. கதைகளம் காமெடியாக இருந்தாலும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை, சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் அழுத்தமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

காதல், நட்பு, காமெடி, சண்டை என கமர்சியலாக இயக்குனர் படத்தை கொண்டு சென்றாலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், இளம் வயதில் காதல் காமம் என்ற விஷயத்தையும் இயக்குனர் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது. பெண்களுக்கு குரல் கொடுத்து வரும் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களுமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் நடிப்பு

கதைக்களம்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

பெண் கல்வி முக்கியத்துவம்

சமூக விழிப்புணர்வு படம்

கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

குறை:

புதுமுக நடிகர்கள்

வழக்கமான காதல் கதை தான்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில இடங்களில் சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கலாம்

மொத்தத்தில் கடுக்கா - காமெடி கலந்த காதல்

Tamil Behind Talkies AMP · Quick view
View full