நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய காஜல் நம்பர் ஒன்.! எதில் தெரியுமா?

By Rajkumar · 12/1/2019

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா கடந்த சில காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து பல நடிகைகளும் இதே பார்முலை தற்போது பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் புதிதாக களமிறங்கியுள்ளவர் நடிகை காஜல் அகர்வால். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில், மனுகுமரன் தயாரித்து இருக்கிறார்.

தமிழில், ‘பாரிஸ் பாரிஸ்,’ தெலுங்கில், ‘தட்ஸ் மகாலட்சுமி,’ கன்னடத்தில், ‘பட்டர் ப்ளை,’ மலையாளத்தில், ‘ஜாம் ஜாம்’ என்று படத்துக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. தமிழ்-கன்னட படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.


தமிழில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர், பலரின் கவனத்தை ஈர்த்து, யூ டியூப்பில் ‘நம்பர்-1’ ட்ரெண்டில் இருந்து வந்தது. தற்போது, இந்த டீசர் 7.2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு உருவான நயன்தாராவின் ‘கோல மாவு கோகிலா’ 6 மில்லியன் பார்வைகளை பெற்று, யூ டியூப்பில் சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்த சாதனையை காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ பட டீசர் முறியடித்து 

Tamil Behind Talkies AMP · Quick view
View full