காஜல் அகர்வாலின் சர்ச்சையான டீஸர் காட்சி..!நடிகர் ரமேஷ் அரவிந்த் கூறும் விளக்கம் என்ன..!

By ·

தமிழில் பிரபு நடித்த “டூயட்” கமல் நடித்த “சாதிலீலாவாதி” போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்தன். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர், பல மாநிலம் மற்றும் கன்னட மொழி படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

[embed]https://www.instagram.com/p/BrrmeyHhRIg/?utm_source=ig_embed[/embed]

தற்போது நடிகர் ரமேஷ் அரவிந்தன் இந்தியில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் “குயின்”. காமெடி ட்ராமா படமான வெளியான இந்த படத்தை தற்போது தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்க : படு மோசமான காட்சியில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால்..!சர்ச்சைக்குள்ளான வீடியோ கிளிப்..!

இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த டீசரின் ஒரு காட்சில் காஜல் அகர்வாலின் மார்பை பிடித்து பெண் ஒருவர் அழுத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் அந்த காட்சி குறித்து விளக்கமளித்த ரமேஷ் அரவிந்த், சர்ச்சையான அந்த காட்சி இந்தியிலும் இடம்பெற்றிருந்தது. தேசிய விருது பெற்ற அந்த படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கட்சியை நீங்கள் டீசரில் பார்க்கும் போது ஒரு மாதிரி தான் இருக்கும். ஆனால், படத்தோடு பார்க்கும் போது அந்த காட்சி உங்களுக்கு பெரிதாக தெரியாது என்று விளக்கமளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full